யாருக்கு போன் போட்டாலும் முடியாது, திருப்பி அனுப்பிய பாதுகாவலர்கள். ஓ.பி.எஸ் வீட்டில் அவமானப்பட்ட நித்யா.

0
496
nithya
- Advertisement -

பூங்கொத்துடன் காத்திருந்து ஓ.எப்.எஸ். வீட்டில் இருந்து அவமானம் படுத்த்தப்பட்ட நித்யா வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. ஆனால், இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது.

-விளம்பரம்-
Nithya

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்து கொண்டிருந்தது. அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

தாடி பாலாஜி- நித்யா பிரச்சனை:

பிறகு கணவன், பயங்கர இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாகவும் தான் வாழ்ந்து வருகிறார். பின் தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த போது தனது மகள் குறித்து கண் கலங்கி பேசி இருந்தார்.

பாலாஜி கொடுத்த குற்றச்சாட்டு:

அப்போது தன் மகளிடம் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நித்யா. அதில் அவர், நடிக்கிறார் என்றும், என் மகளை கொடுக்க முடியாது என்றும் கூறி இருந்தார். இதனை அடுத்து தனது மகளை, மனைவி பிடியிலிருந்து மீட்டுத் தரும் படியும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடிகர் தாடி பாலாஜி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுத்து இருந்தார். இதற்கு நித்யாவும் பதிலடி கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

பேட்டியில் நித்யா சொன்னது:

பின் நித்யா பத்திரிகையாளர்களை சந்தித்து, நான் கோர்ட்டில் சந்திக்கிறேன். நியாயம் தருகிறேன் என்று பிக் பாஸ் வீட்டில் சொல்லி இருந்தார்கள். அத்தனையும் பொய். கமல் அவர்கள் மக்கள் நீதி மையம் வைத்து இருக்கிறார். அவர் நீதி மையத்தில் உறுப்பினராக இருக்கும் பெண்ணுக்கே நியாயம் இல்லை. இவர் எங்கே மக்களுக்கு நியாயத்தை தருவார்? என்று கமல் குறித்து தாறுமாறாக கூறி இருந்தார். இப்படி கணவன், மனைவி இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஓபிஎஸ் வீட்டில் அவமானம்பட்ட நித்யா:

இந்நிலையில் ஓபிஎஸை பார்க்க பாலாஜியின் மனைவி நித்யா பூங்கொத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பின் அவர் யாருக்கோ போன் செய்து பேசுகிறார். இருந்தாலும் அங்கிருந்த பாதுகாப்பாளர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்பு அங்கிருந்து ஏமாற்றத்துடன் நித்யா செல்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement