தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 88 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது. பின் இந்த வாரம் விஷ்ணு, மாயா, ரவீனா, மணி, நிக்சன், தினேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். மேலும், இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முயல் டாஸ்க் நடைபெற்றது.
டிக்கெட் டு பினாலே டாஸ்க்:
முயல் டாஸ்கில் விஷ்ணு 3 பாயிண்ட் எடுத்து முதலிடத்தை பிடித்திருந்தார். மணி இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மாயா மூன்றாமிடம் பிடித்திருந்தார். அதற்குப்பின் டிக்கெட் டு பினாலேவின் இரண்டாவதாக கார்ட் டாஸ்க் நேற்று நடைபெற்றது. இது ஒரு பரமபதம் விளையாட்டு மாதிரி. போட்டியாளர்களிடம் கார்டு கொடுத்து அதில் இருப்பது போல் எழுமினேட், முன்பின் நகர்வது, வெளியேறுவதுமாக விளையாட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு கார்டை எடுத்து விளையாடினார்கள்.
நி க்சன்- மாயா- விஜய் வர்மா செய்த வேலை:
ஆனால், நிக்சன்- மாயா- விஜய் வர்மா- பூர்ணிமா ஆகியோர் சேர்ந்து கொண்டு ஏமாற்று வேலை செய்து இருக்கிறார்கள். நிக்சன் எலிமினேட் கார்டில் அடையாளம் வைத்துக்கொண்டு அந்த கார்ட்டை எடுத்து மற்ற போட்டிகளை எலிமினேட் செய்திருந்தார். அதோடு இவருக்கு உறுதுணையாக விஜய் வர்மாவும் கார்டை கலைத்து இந்த கார்டை எடு, அந்த கார்டை எடு என்று குழுவும் கொடுத்திருந்தார். இதை அர்ச்சனா பார்த்து விட்டார். பின் பிக் பாஸ் இடம் இவர் மைக்கில் ரகசியமாக ஏமாற்றி விளையாடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.
உளறி கொட்டிய பூர்ணிமா:
மேலும், இவர்கள் ஏமாற்று வேலை செய்ததில் நிக்சன் இந்த டாஸ்கின் வெற்றியாளரானார். அதற்கு பிறகு இந்த டாஸ்க் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது பூர்ணிமா வழக்கம் போல் உளறி விட்டார். விஜய் விர்மா இதை எடு, அதை எடு என்று ஹிண்ட் கொடுத்தார். அதை வைத்து செய்தோம் என்று உளறி விட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பார்த்து நெடிஷன்கள் பலரும், இது ஒரு விளையாட்டா? எதற்கு இந்த கேம்? இதற்கு நேரடியாகவே வெற்றியாளரை சொல்லலாம்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
பொதுவாகவே டிக்கெட் டு பினாலே டாஸ்க் என்றால் ஒவ்வொருவரும் தனித்துவமாக விளையாட வேண்டும். ஆனால், இந்த முறை இவர்களுக்குள் ஒரு கேங் சேர்த்துக் கொண்டு விளையாடுகிறார்கள். பிடித்தவர்கள் என்றால் அவர்களை விளையாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். இல்லையென்றால், ஏதாவது பண்ணி அவர்களை விளையாட்டை விட்டு தூக்கி விடுகிறார்கள். இதில் தனித்துவமான விளையாட்டு எங்கே இருக்கிறது? மற்றவருடைய வன்மம் தான் தெரிகிறது என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த வார இறுதியில் கண்டிப்பாக இந்த டாஸ்கை குறித்து கமல் குறும்படம் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.