வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட கேப்டனின் உடல், கணவரின் உடலை பார்த்து கதறி அழும் பிரேமலதா.

0
244
- Advertisement -

நடிகரும் தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மேலும், சில தினங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில், விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை.

- Advertisement -

அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இது வழக்கமான பரிசோதனை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாககூறப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், விஜயகாந்தின் இறப்பிற்கான காரணம் குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவருக்கு நுரையீரல் அழற்சி (Pneumonia) ஏற்படடு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், மருத்துவர்கள் கடின முயற்சி செய்த போதிலும் அவர் காலமானதாகவும் தெரிவித்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கேப்டனின் மனைவி பிரேமலதா கதறி அழுதை பார்த்து தொண்டர்கள் கதறி அழுதனர். மேலும், கேப்டனின் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement