வெளியானது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்.! அதிகம் நாமினேட் செய்ப்பட்டவர் இவர் தான்.!

0
30978
bigg-boss

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

bigg-boss

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார். எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : இறுதி போட்டிக்கு யார் செல்ல வேண்டும் என்று தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்.! முழு லிஸ்ட் இதோ.!

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சேரன், கவின், லாஸ்லியா ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த முறை யார் பேரால் நாமினேட் ஆகியுள்ளனர் என்ற விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். மேலும், மற்ற போட்டியாளர்களின் விவரம்,

  • கவின் – 4 Votes
  • லாஸ்லியா – 3 Votes
  • ஷெரின் – 3 Votes
  • சேரன் – 2 Votes
  • முகென் – 1 vote
  • சாண்டி – 1 Vote
Image result for sherin cheran

எனவே, தற்போது வெளியாகியுள்ள நாமினேஷன் லிஸ்ட் படி இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இந்த வாரத்தின் முடிவில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் நாமினேட் ஆனவர்களில் இருந்து வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் இனி வரும் நாமினேஷனிலிருந்து கூட தப்பித்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement