6 ஆண்டுகள் கழித்து தங்கர் பச்சன் இயக்கிய’கருமேகங்கள் கலைகின்றன’ எப்படி ? விமர்சனம் இதோ

0
2527
karumegangal
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக இருப்பவர் தங்கர் பச்சன். தற்போது இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்த படத்தில் அருவி படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த நாயகி அதிதி பாலன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வீரசக்தி தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் கருமேகங்கள் கலைகின்றன படம் ரசிகர்கள் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் பாரதிராஜா அவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதியாக இருக்கிறார். பரோட்டா மாஸ்டர் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு நாள் பேருந்து பயணத்தில் சந்திக்கிறார்கள். அப்போது இவர்கள் இருவருமே வெவ்வேறு தலை முறைகளை சேர்ந்தவர்கள். தொலைந்த உறவுகளை தேடி அதை மீட்க செல்கிறார்கள். அந்த பயணத்தின் இறுதியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

- Advertisement -

இவர்களுடைய பயணத்தில் போது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் குடும்ப உறவுகளில்
இருக்கும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் காண்பிக்கும் படமாக இருக்கிறது. தன்னை போலவே மகனும் அறத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்று தந்தை நினைக்கிறார். பணம், புகழுக்காக பாசம், அன்பு, நேசம் இல்லாத ஒரு மகனை பாரதிராஜா வளர்க்கிறார். அவர் தன்னை வளர்த்த தந்தையின் 75 வது பிறந்த நாளுக்கு உயர்ந்த விலை உயர்ந்த காரை பரிசாக அனுப்பி வீடியோ லைவில் வாழ்த்துக்களை சொல்லி பேசுகிறார்.

இதனால் தந்தை படும் பாசம் ,மகன் வழியில் வரும் உறவுகள் நடத்தும் விதம் ஆகியவற்றை அழகாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார். அழகான குடும்ப உறவுகள், பாசத்தின் முக்கியத்துவத்தையும் இயக்குனர் காண்பித்திருப்பது சிறப்பான ஒன்று. இந்த படத்தை அவர் சினிமாவின் முன்னோடி திரைப்படம் மேதையான ஜான் லூக் கோதார்த்துக்குப் படத்தை அர்ப்பணித்திருக்கிறார் தங்கர் பச்சான். ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

சமீப காலமாக வெளியாகி இருக்கும் திரில்லர் சினிமாக்களுக்கு இந்த படம் உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பார்வையாளர்களை தங்களுடைய கடந்த கால கதைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு இணைத்திருக்கிறது. இதைவிட இந்த படத்தினுடைய மிகப்பெரிய பலமே பாரதிராஜா என்று சொல்லலாம். அவருடைய அனுபவம் நடிப்பும் பாச உணர்வும் சிறப்பாக இருக்கிறது. இவர்களை அடுத்து அதிதி பாலன், யோகி பாபு, கௌதம் மேனன் என பலருமே தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்த படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்வையாளர்களின் கண்களை குளமாக்கி இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாகவும் மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருக்கிறது அனைவருக்கும் அன்பு வேண்டும் என்பதை இந்த படத்தின் மூலம் தங்கர்பச்சான் கூறி இருக்கிறார். மொத்தத்தில் ஒரு சிறந்த முயற்சி.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்

குடும்ப உறவுகளின் முக்கியத்துவம்

கதைகளம் சிறப்பு

ஒளிப்பதிவு,இசை ஓகே

குறை:

படம் முழுக்க அழுகை காட்சிகளாகவே இருக்கிறது

பல இடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் சளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது

வழக்கமான பாசை கதையை தான் இயக்குனர் கொடுத்திருக்கிறார்

இன்னும் கொஞ்சம் வித்தியாசத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்

மொத்தத்தில் கருமேகங்கள் கலைகின்றன- சுமாரான படம்

Advertisement