பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ஆர்மியை உருவாக்கியவர் நடிகை ஓவியா. இவர் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ஹெலென் நெல்சன். நடிகை ஓவியா அவர்கள் கடந்த 2007ம் ஆண்டு மலையாள இயக்குநர் ராஜபாபு இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான கங்காரு என்ற படத்தில் சூசனா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அபூர்வா, புதியமுகம் உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.
பின் நடிகை ஓவியா அவர்கள் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், யாமிருக்க பயமே, காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்ததால் ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார். பிறகு இவர் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. மேலும், இவருக்கு சமூக வளைதளத்தில் பல்வேறு ஆர்மிக்களையும் உருவாக்கினார்கள். பிக்பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டார் ஓவியா.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 90எம்எல் என்ற படம் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்தும் இரட்டை அர்த்த வசனங்களையும் ஓவியா பேசியதால் ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளானார். தற்போது மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கலக்கி கொண்டு வருகிறார் நடிகை ஓவியா.
இந்நிலையில் நடிகை ஓவியாவின் 29ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இன்று நடிகை ஓவியாவின் பிறந்தநாளை ஒட்டி சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அனைவரும் ஓவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகை ஓவியா அவர்கள் சமீபத்தில் வீடியோ கால் மூலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த சமயத்தில் வீட்டில் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நிறைய விஷயங்களை மிஸ் பண்ணுகிறேன்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சரக்கை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய பிறந்தநாளுக்கு கூட ஒரு ஒயின் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த பிரச்சனை சீக்கிரம் முடியும் என்று நினைக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக பத்திரமாக இருங்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பயங்கர ஷேர் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு இவர் தன்னுடைய பிறந்தநாளை நடிகர் ஆரவ்வுடன் பயங்கரமாக சந்தோசமாக கொண்டாடி இருந்தார். இந்த வருடம் நாடு முழுவதும் லாக்டவுனில் இருப்பதால் வீட்டிலேயே கொண்டாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஓவியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #HappyBirthdayOviya என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ஓவியா ஆர்மியினர் தெறிக்கவிட்டு வருகின்றனர். ஓவியாவின் புகைப்படங்கள், காமன் டிபி, மாஷ் அப் என வழக்கம் போல பர்த்டே ஸ்பெஷல் அலப்பறைகளை அசத்தலாக செய்து வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.