ஜனனிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! ஓவியா என்ன செய்யப்போறாங்க தெரியுமா ..?

0
247

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவில் சீசன் 1 போட்டியாளரான ஓவியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் ஹரிஷ் கல்யாணும், சில நாட்களுக்கு முன்னர் ஆர்த்தி, சினேகன், வையாபுரி, சுஜா, காயத்ரி ரகுராம் ஆகியோர் சிறப்பு விருத்தினராக வந்திருந்தனர்.

Bigg-boss-task

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2 ஆம் சீசன் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில் நடந்து வர வேண்டும். ஒவ்வொரு முறை பஸ்ஸர் ஒளித்தவுடன் யாரது பௌலில் தண்ணீர் குறைவாக இருக்கிறதோ அவரகள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார் என்பது தான் டாஸ்க்.

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கில் இருந்து பாலாஜி, ஐஸ்வர்யா, ரித்விகா, மும்தாஜ் ஆகியோர் வெளியேறி விட்டனர் . இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பார்க்கும் போது ஜனனி ஐயர் மற்றும் யாஷிகா தான் இறுதி வரை நின்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், தற்போது வந்த தகவலின்படி ஜனனி தான் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டை வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

 

ticket to finale

தற்போது வந்த தகவலின்படி ஜனனிக்கு கோல்டன் டிக்கெட்டை பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளரான ஓவியா அளிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் இலங்கையில் இருந்து இந்தியா வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்நிகழ்ச்சியில் ஓவியா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.