முதல் முறையாக ஆதரவு கேட்டு விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ.! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

0
245
Vijayakanth

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 18 மீண்டும் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டது.

இதனால் மீண்டும் அமெரிக்கா சென்ற விஜயகாந்த் நீண்ட நாட்களாக அங்கேயே இருந்துவந்தார் . பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணியும் வைத்தார். ஆனால், அந்த அறிவிப்பை கூட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தான் அறிவித்திருந்தார்.

கட்சி பொது கூட்டத்தின் போதும் செய்தியாளர் சந்திப்பின் போது கூட விஜயகாந்த் பேசாமலேயே இருந்தார். இதனால் அவரது ரசிகர்களும் அவரது உடல் நலன் குறித்து மிகுந்து சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் சிகிச்சைக்கு பின்னர் முதன் முறையாக பேட்டி கொடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் கம்பீரமாக குரலில் பேசி படத்தில் நடித்தவர், மேடைகளில் பேசியவர் இப்போது பேசவே முடியாத நிலையில் இருக்கிறாரே என வீடியோ பார்த்த ரசிகர்கள் அனைவரும் கலக்கியுள்ளார்.