‘கண்டதும் காதல் என்பது இதான்’ – பிக் பாஸ் 1 பிரபலத்துடன் அஜித்தின் ரேஸ் தோழி பதிவிட்ட புகைப்படம்.

0
1815
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நடிப்பையும் தாண்டி கார் பைக் என்றால் எவ்வளவு பிரியம் என்பது அவரது ரசிகர்கள் அறிவார்கள். காரை விட இவருக்கு பைக் தான் மிகவும் பிடித்த விஷயம். அஜித் படம் என்றாலே கார் அல்லது பைக் காட்சிகள் நிச்சயம் இடம் பிடித்துவிடும். அதே போல அஜித்திற்கு பைக் ஓட்டுபர்வர்கள் மீதும் ஒரு அலாதியான பிரியம் தான். அதிலும் பெண் பைக்கர்ஸ் என்றால் அஜித்துக்கு எப்போது ஒரு ஆர்வம் தான்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட டெல்லியில் பைக்கில் உலகை சுற்றிவந்த சாதனை பெண்ணை சந்தித்த பேசி இருந்தார் அஜித். அதே போல அஜித்துக்கு பல ஆண்டுகளாக தோழியாக இருந்து வருபவர் பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா. அலிஷா அப்துல்லா ஒரு இந்திய பைக் ரேஸ் விளையாட்டு வீரர். இவரே இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரும் ஆவார்.

இதையும் பாருங்க : பெண் வேடமிட்டு அரசு பஸ்சில் பயணித்த யூடியூபர் – வைரலாகும் வீடியோ (காரணத்தை பாருங்க)

- Advertisement -

இவர் சிறு வயதில் இருந்தே தானுந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய எட்டு வயதில் இருந்தே பயிற்சி பெற்று, இன்று சாதனையும் படைத்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் இரும்பு குதிரை படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படி ஒரு நிலையில் இவருடன் 5 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் பிரபலமான ரைசா.

சமீபத்தில் அலிஷா, தனது இன்ஸ்டா பக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரைசாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘கண்டதும் காதல் என்பது இவளுடன் இருக்கும் போது தான்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை ரைசாவும் தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பகிர்ந்தார். மேலும், அலிஷா தனக்கு அனுப்பிய பிரியாணியை கூட புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார் ரைசா.

-விளம்பரம்-
Advertisement