கில்லி பட ரீ- ரிலீஸ் 20 ஆண்டுகள் கழித்து நிறைவேறி இருக்கும் கில்லி பட நடிகரின் ஆசை. என்ன தெரியுமா?

0
111
- Advertisement -

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள் அந்த வகையில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களாக கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் நடித்த நாகேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.

அப்போது பேசிய அவர் ‘ரீ ரிலீஸ் ஆனவுடன் இந்த படத்தை முதல் நாளே சென்று பார்த்தேன். ஏதோ புதிய படம் வெளியானது போல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த படத்தில் நடித்த எனக்கே 20 வருடங்கள் கழித்து பார்க்கும் போது மிகவும் பிரஷ்ஷாக இருக்கிறது. மக்களுக்கு சொல்லவா வேண்டும். 2004 ஆம் ஆண்டு கில்லி படம் வெளியான போது நான் சென்னையில் இல்லை என்பதால் அப்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க முடியாமல் போனது.

-விளம்பரம்-

அது எனக்கு ஒரு குறையாகவே இருந்தது. தற்போது 20 ஆண்டுகள் கழித்து அந்த துறை தீர்ந்திருக்கிறது. இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த அனுபவத்தை கொடுத்த இயக்குனர் தரணி சாருக்கு தான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார். மேலும், தரணி சார் என் கேரக்டருக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார். எனக்கு மட்டுமில்லை.

அந்தப் படத்தில் நடிச்ச எல்லா நடிகர்களோட முழு திறமையையும் படத்திற்குள் கொண்டு வரணும்னு மெனக்கெட்டார்.விஜய் உடன் சேர்ந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இப்போ மாஸ்டர் படத்தில் நடிக்கும் போது கூட கில்லி 2 படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் பிளான் பண்ணினார்கள். ஆனால், அதற்குள் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். இதனால் கில்லி 2 எடுக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

Advertisement