பிக் பாஸ் வீட்டை விட்டு ரகசியமாக வெளியே சென்று வந்தாரா இவர்..? அதிர்ச்சி செய்தி.!கமல் விளக்கம் .!

0
685
ponnambalam

100 நாட்கள் 16 போட்டியாளர்கள் 30 கும் மேற்பட்ட கேமராக்கள், ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. இது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றபடும் வரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வர முடியாது.

bigg boss

அப்படித்தான் மக்கள் அனைவரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 7) விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் இந்த நிகழ்ச்சி குறித்து சில கேள்விகளை ரசிகர்களிடம் கேட்கச்சொன்னார்.

அப்போது ஒரு பார்வையாளர் நடிகர் கமலிடம் “பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வதாக கூறப்படுகிறது.அதிலும் குறிப்பாக நடிகர் பொன்னம்பலம் அடிக்கடி வெளியே செல்வதாக கூறப்படுகிறது. அது உண்மையா , வதந்தியா? ” என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறிய கமல் “இது முற்றிலும் வதந்தி தான். அப்படி பொன்னம்பலத்தை நேரில் பார்த்தேன் என்று கூறுபவர்கள் , ஏன் அப்போது பொன்னம்பலத்தை தங்கள் செல் போனில் படம் எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அப்படி எடுத்திருந்தால் நான் இந்த கேள்விக்கு தலை குனிந்து இருப்பேன் ” என்று தெரிவித்தார்.

ponambalam actor

இது போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பரணி வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்கு பின்னர், பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜூலி , பொது இடத்தில் பரணியின் காலில் விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த சமயத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜூலி எப்படி வெளியே வந்தார் என்று பலரும் கேள்வி எழுப்பினர் என்பது குறிபிடத்தக்கது