பிரதீப்பிற்கு என்ன பதில் சொல்ல போறீங்க – நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பூர்ணிமாவின் திமிரான பதில்.

0
663
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, பூர்ணிமா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மற்ற சீசன்களை விட இந்த ஏழாவது சீசன் தான் அதிக சர்ச்சைகளில் சிக்கிருந்தது என்றே சொல்லலாம். இந்த சீசனில் தான் கமலஹாசனை அதிகமாக விமர்சித்து இருந்தார்கள். காரணம், சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் விவகாரம் தான். இந்த சீசனில் பிரபலமான பிரபலமான மற்றும் பலமான போட்டியாளராக இருந்தவர் பிரதீப். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகமாக தான் இருந்தது.

- Advertisement -

பிரதீப் குறித்த சர்ச்சை:

கண்டிப்பாக, இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மாயா- பூர்ணிமா கேங்க் தான். பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் கூறியிருந்ததார்கள். கமலும், பிரதீப் தரப்பு குறித்து கேட்காமலேயே வெளியேற்றினார்.

16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா :

இதனால் ரசிகர்கள் கொந்தளித்து கமலை வறுத்தெடுத்து இருந்தார்கள். இந்த நிலையில் பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் மதிப்புடைய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.பூர்ணிமா வெளியேறிய போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப் அம்மாகிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறடிக்குற கும்பல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாய கிளராதீங்க. பொளச்சு போங்க. உங்க பொளப்ப கெடுக்க மாட்டேன் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதை பார்த்த பூர்ணிமா ரசிகர்கள் கொந்தளித்து போய் பிரதீப் குடும்பத்தினை பங்கமாக கலாய்த்து கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் கோபம் அடைந்த பிரதீப், பர்ஸ்ட் வெளிய வர போட்டியாளர்கள் கிட்ட பிக்பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பாள் இருக்கானு கேட்டுட்டு என்னை வந்து கலாய்ங்க.என் குடும்பத்த இழுங்க. என் மனநிலை பத்தி பேசுங்க. சும்மா ஒன்னும் தெரியாம யூகத்தை தூக்கிக்கிட்டு வராதீங்க. என் மடில கனமில்லை என்று பதில் கொடுத்திருந்தார். இருந்தும் விடாமல் பூர்ணிமா ரசிகர்கள் பிரதிப்பை அட்டாக் செய்து கொண்டே இருந்தார்கள்.

Red Card குறித்து பூர்ணிமா :

இப்படி ஒரு நிலையில் வெளியில் வந்த பூர்ணிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது தொகுப்பாளர் பிரதீப்பிற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள், பிரதீப்பிற்கு Red Card கொடுத்ததற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த பூர்ணிமா ‘ நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு நாள் எல்லாருக்கும் புரியும், எல்லாருக்கும் அப்போ எல்லார பத்தியும் புரியும்’ என்று திமிராக கூறியுள்ளார்.

Advertisement