கூல் சுரேஷ் என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் இப்படி ஒரு வார்த்தையில் திட்டலாமா? – எல்லை மீறி பேசிய பிரதீப்.

0
237
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது.

-விளம்பரம்-

அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருந்தார்கள். இப்படி இருக்க கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். 5 Wild Card போட்டியாளர்கல் நுழைந்ததால் பிக் பாஸில் 19 போட்டியாளராக மாறியது.

- Advertisement -

இதனால் Double Eviction என்று அறிவித்து ஷாக் கொடுத்தார் கமல். அந்த வகையில் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா வெளியேற்றப்பட்டார். Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர். இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கட் செய்ய துவங்கிவிட்டனர்.

இப்படி இரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மணி அடங்கிய பேண்ட் ஒன்றை போட்டியாளர்கள் தலையில் அணிந்துகொள்ள வேண்டும். அப்படி அணிந்துகொண்டு ஒரே இடத்தில் நிற்காமல் நடந்துகொண்டே இருக்க வேண்டும் அப்படி நடக்கும் போது மணியில் இருந்து சத்தம் வந்தால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதே ரூல்ஸ்.

-விளம்பரம்-

இந்த கேமில் மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ் ஆகிய சிலர் ஆரம்பத்திலேயே அவுட் ஆகிவிட பிரதீப் தனியாக நடந்துகொண்டு இருந்தார். அப்போது கூல் சுரேஷ் சென்று அவர் அவுட் என்று கூறினார். ஆனால், நான் அவுட் ஆகவில்லை என்று பிரதீப் கூறினார். பின்னர் அந்த சுற்றில் அவுட் ஆனவர்களை அறிவித்த போது கூல் சுரேஷ், பிரதீப் பெயரை சொல்ல நீ எல்லாம் பெரிய மனுசனா என்று திட்டி ஒரு மோசமாக T வார்த்தையை கூறினார்.

இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் பிரதீப் சொன்னதை ஆரம்பத்தில் விளையாட்டாக எடுத்துக் கொண்ட ஸ்கூல் சுரேஷ் ஒரு பட்டத்தில் அவரும் கோபமடைந்தார் என் அம்மாவைப் பற்றி நீ எப்படி அப்படி பேசலாம் நீ எப்படி சொன்னால் என் அம்மா அப்படி ஆகிவிடுவாரா என் அம்மா சத்தியமாக நான் போய் சொல்லவில்லை என்று கூறினார் ஆனால் பிரதீப் என் மணி அடிக்கவே இல்லை அவரே கையில் வைத்திருந்த மணியை ஆட்டி நான் அவுட் என்று சொல்லி ஒரு கேவலமான விளையாட்டு விளையாடினார் என்று முறையிட்டார்.

இருப்பினும் பிரதீப் பேசிய வார்த்தை தவறானது என்று மாற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிரதிப்பை மன்னிப்பு கேட்க சொன்னார்கள் ஆனால் கடைசிவரை மன்னிப்பு கேட்கவே இல்லை பின்னர் விளையாட்டில் இருந்த அனைவரும் தங்கள் விளையாட்டை தொடர பிரதீப் மட்டும் தனியாக போய் அமர்ந்து விட்டார் பிரதீப்பின் இந்த பேச்சு போட்டியாளர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் முகம் செழிக்க வைத்திருக்கிறது என்னதான் ஸ்கூல் சுரேஷ் தவறு செய்து இருந்தாலும் அவரை எப்படி பிரதீப் கெட்ட வார்த்தையில் திட்டி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான் என்பதை மறுக்க முடியாத உண்மை

Advertisement