‘Unfair’ சினேகன் முதல் பிரியங்கா, பாவனி வரை – பிரதீப்பிற்கு ஆதரவு கொடுத்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

0
557
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் சீசன் ஒன்றில் பரணி துவங்கி இந்த சீசனில் பாவா செல்லதுரை வரை நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரெக்கார்ட் வாங்கி வெளியேறிய முதல் போட்டியாளர் மஹத்தான். அவரைத் தொடர்ந்து தற்போது ரெக்கார்ட் வாங்கி வெளியேறி இருக்கிறார் பிரதீப்.

-விளம்பரம்-

இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள். ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை.

இருப்பினும் பிரதீபால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே மாயா மற்றும் அவரது குழுவினரின் வாதமாக இருந்தது. இதனால் கமல் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதில் அன்ன பாரதி, விசித்ரா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் பிரதிப்பை வெளியில் அனுப்பலாம் என்று ஒரு மனதாக தேர்வு செய்தார்கள் இதனால் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

பிரதீப்பின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் பிரதிப்பிற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதீப்பின் உயிர் தோழனான கவின் பிரதீப் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு எப்போதும் உன்னை பற்றி தெரியும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், பாடலாசிரியர் சினேகன் ‘ நீ பார்க்காத ரணங்களும் இல்லை… நீ பார்க்காத வலிகளும் இல்லை… பிரதீப்… இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை…. வெளியே கிடக்கு வா’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், முன்னாள் போட்டியாளர் பாவனி, பிரதீப்பின் வெளியேற்றத்தை மறைமுகமாக குறிக்கும் வகையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘ அனைவருக்கும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதே போல முன்னாள் போட்டியாளரான நிரூப் ‘Unfair உங்களை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரே கொடூரமான மற்றும் நியாயமற்ற வழி இதுதான் என்று பதிவிட்டுள்ளார். அதே போல விஜய் டிவி பிரியங்கா ‘ Unfair என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டியும் பிரதீப்பின் வெளியேற்றம் நியாயமற்றது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement