கடுப்பாகி சோபாவில் குத்திய ரியோ – போட்டியாளர்களுக்குள் வெடிக்கும் சண்டை.

0
1888
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (அக்டோபர் 4 ) துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிகரமாக நேற்றோடு வெற்றிகராக முதல் வாரத்தை நிறைவடைந்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை போட்டியாளர்கள் முழுமையாக ஒரு வாரம் கழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே எந்த ஒரு பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. இடையில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தை சுரேஷ் சக்கரவர்த்தி விட்டாலும் அனிதா சம்பத் விடாமல் அடிக்கடி சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்து வருகிறார். இது ஒருபுறமிருக்க கடந்த வாரம் பிக்பாஸ் ஸ்டால் ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அதேபோல முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் எந்த ஒரு எலிமினேஷனும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

இதையும் பாருங்க : மதுமிதா நாயே – மனைவியை திட்டி தீர்த்து மதுமிதா கணவர் செய்த ட்வீட்டால் ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை கூறவேண்டும் அப்படி கூறும் சிறந்த 8 போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள். மீதமுள்ள 8 பேர் நேரடியாக அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா, அஜீத், ஷிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ

-விளம்பரம்-

இதில் சுரேஷ் இந்த வார தலைவராக தேர்ந்துடுக்கபட்டிருந்ததால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சனம் ஷெட்டி (11 Vote), ஷிவானி (6 Vote) சம்யுக்தா(5 vote) ரேகா (4 vote), ஆஜீத் (2 Vote), ரம்யா (2 Vote), கேப்ரில்லா (2 vote) ஆகியோர் இடம்பெற்றுள்னர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களுக்கு ‘Eviction Free Pass’ சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதை பெரும் ஒரு நபரை இந்த சீசன் முடியும் வரை யாராலும் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement