அனிதா சும்மா இருந்தாலும் இவ ஏத்தி ஏத்தி விட்றா – கடுப்பான சம்யுக்தா.

0
1100
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நான்காவது வாரத்தில் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் பல்வேறு விதமான சண்டைகள், சச்சரவுகள், பாசங்கள் என்று பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி விட்டது. மேலும் ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. அதிலும் அர்ச்சனா வந்த பின்னர் பிக் பாஸ் வீட்டில் பல குழப்பங்கள் அரங்கேறி விட்டது.

-விளம்பரம்-

ஆனால் இன்னமும் சிவாணி சோம் சேகர் போன்ற போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்களா என்பது கூட தெரியாமல் தான் இருக்கிறது கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் சோகமாக தான் சென்று கொண்டு இருக்கிறது. அதுவும் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சோகத்தை பிழிந்துவிட்டனர். அதிலும் அனிதா சம்பத் சொன்னநீள சோக கதையை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் சம்யுக்தாவே போதும் அனிதா என்று நிறுத்திவிட்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஆஜீத், வேல் முருகன், சனம் ஷெட்டி ஆகியோர்க்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement