பிக்பாஸ் ரைசாவிடம் ஏர்போர்ட்டில் ரசிகர் செய்த செயலை பாருங்க.! ஷாக்கான ரைசா

0
847
raiza

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

raiza nominate gayathiri

- Advertisement -

சமீபத்தில் கோயம்பத்தூர் விமான நிலையம் முன்பாக ரைசைவிடம், ரசிகர் ஒருவர் மண்டியிட்டு மலர் கொத்து கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரு மாடல் அழகியான ரைசா , பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறுவதற்கு முன்னாள் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் தொடரில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு தனுஷ் நடித்த ‘வி ஐ பி ‘ படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

தற்போது ரைசா ஒரு முழு நேர நடிகையாக மாறியுள்ளார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ‘பியார் பிரேமா காதல் ‘ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement