கலர்ஃபுல்லாக தன்னுடைய குடும்பத்துடன் ரம்யா பாண்டியன் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம்.
இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
ரம்யா பாண்டியன் திரைப்பயணம்:
பின் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அதன் பின் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யா பாண்டியன்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இருந்தாலும், அதனையெல்லாம் சமாளித்து படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளியா “நண்பகல் நேரத்து மயக்கம்” மலையாளம் டப் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடிகர் ரம்யா பாண்டியன் தாத்தாவின் 93 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருந்தது.
பிறந்தநாள் கொண்டாட்டம்:
இந்த பிறந்தநாள் விழாவில் ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
மேலும், இந்த பிறந்த நாளை திருநெல்வேலியில் கொண்டாடி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய தாத்தாவின் பிறந்த நாளின் போது தங்களுடைய உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, 93 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா. நேர்மை, கடின உழைப்பு, நண்பர், தத்துவ ஞானி மற்றும் சாமர்த்தியமான ஆலோசகர், உங்கள் உறவினர்கள் மீது அன்பு, 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் நம் தேசத்திற்கு சேவை செய்த உங்கள் நற்பண்புகளால் எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்திருக்கிறீர்கள்.
வைரலாகும் பதிவு:
புத்திசாலித்தனமான இதயம், இருண்ட சுரங்க பாதையின் முடிவில் ஒளியை காணும் திறன் ஆகியவை என் குழந்தை பருவத்தில் இருந்து என்னை கவர்ந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சொந்த தொழிலில் கவனம் செலுத்துவது, அமைதியான வாழ்க்கைக்கு வழிகோலாக இருக்கிறது என்பதை நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். இவ்வாறு கூறுவதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு உதாரணமாக தந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை எங்களுக்கும் வரவிருக்கும் எதிர்கால தலைமுறைக்கும் உயர்தரத்தை அமைக்கும் அளவுகோலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.