விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல நடிகையான ரேஷிமாவும் ஒருவர். இவர் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் ‘”புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் முதலில் வடிவழகி ஆக தான் விமானப் பணிப் பெண்ணாக பணிபுரிந்தார். பின், ரேஷ்மா அவர்கள் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் தொடர்ந்து டிவி சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர் ரேஷ்மா. அதற்கு பின் பெயர் இவர் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தன. இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி சினிமாவில் தயாரிப்பாளர் ஆவார். மேலும், இவரது தந்தை தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவர்கள் நடித்தார். மேலும்,இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இவர் மலையாளம், தமிழ் என இரு மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது நடிகை ரேஷ்மா அவர்கள் எப்போதும் ‘நியூட்ரல்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். இதனால் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு சீக்கிரம் வெளியேறினார் என்று கூட சொல்லலாம். இதன் பிறகு மக்களிடையே பிரபலம் ஆனார். மேலும், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் தற்போது தன் குழந்தைகளுடன் தனியாக தான் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
இதையும் பாருங்க : வாடகை கூட வேண்டாம் வெளியேறுங்க. இடிக்கப்பட்டதா இளையராஜாவின் இசைக்கோவில்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ரேஷ்மி அவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதிலும் இவர் அமெரிக்காவில் முழு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூட ஆள் இல்லையாம். இவரே காரை ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றாராம். ஆனால், பின் சில நாட்களில் அந்த குழந்தை இறந்து விட்டது. மேலும், அந்த குழந்தையை அங்கேயே புதைத்து வைத்து விட்டு இந்தியா வந்தாராம். பின் ரேஷ்மா வருடம் வருடம் அந்த குழந்தையை பார்க்க அமெரிக்கா செல்வார் என்று அவர் கூறினார்.
இதைக் கேட்டு போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் தமிழக மக்களின் பல பேர் மனதை உலுக்கியது என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கையில் பல சோகங்கள் நடந்தது. இந்நிலையில் ரேஷ்மா அவர்கள் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு பல படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளி வந்து உள்ளது. இந்நிலையில் இவர் ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டு உள்ளார். வாழ்க்கை மிகவும் குறுகலானது. அதனை உங்களை சிரிக்க வைத்து உங்களிடம் அன்பும் காட்டும் நபருடன் செலவழியுங்க என்று பதிவிட்டுள்ளார் மேலும், இந்த புகைப்படத்தில் இருப்பவர் இவருடன் காதலாக இருப்பாரா?? என்றும் அவரைத் தான் இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரா?? என்றும் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.