குமரன் முதல் சஞ்சீவ் ஆல்யா மானஸா வரை – இறுதி வாரத்தில் ரியோவை காப்பற்ற என்ன செய்துள்ளார்கள் பாருங்க.

0
5876
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் ரியோ, கேப்ரில்லா, நிஷா, ரம்யா, ரேகா, ஆஜீத், ஷிவானி என்று பல்வேறு விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர் (ரம்யா, ரேகா இருவரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி reference பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் விஜய் டிவி பிரபலங்களை மட்டும் தொடர்ந்து காப்பற்றி வருவதாக ரசிகர்கள் பலரும் குறை கூறி வந்தனர். அதிலும் குறிப்பாக ஷிவானி, ஆஜீத் எல்லாம் எப்போதோ வெளியில் செல்ல வேண்டிய நபர்கள். ஆனால், அவர்கள் எல்லாம் 90 நாட்களுக்கு மேல் பிக் பாஸில் தப்பித்து வந்தனர்.

-விளம்பரம்-

ஆனால், ரசிகர்களின் பல ஆதரவை பெற்ற சனம் ஷெட்டியை வெளியில் அனுப்பிபோதுதான், விஜய் டிவி பிரபலங்களை காப்பாற்ற பிக் பாஸ் திட்டமிட்டு வருவதாக பலரும் குற்றம் சாட்டினர். அவ்வளவு ஏன் ஆஜீத்தை ரசிகர்கள் மூன்றாம் வாரத்திலேயே அனுப்பிவிட்டனர். ஆனால், அப்போது அவருக்கு Eviction Free Pass கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு இருந்தார். இப்படி பல விமர்சனங்கள் இருக்கும் நிலையில் தற்போதய நிலையில் ரியோ, கேபி என்று இரண்டு விஜய் டிவி பிரபலங்கள் இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி விஜய் டிவி தான் விஜய் டிவி பிரபலங்களை காப்பாற்றி வருகிறது என்று விமர்சனகள் நிலவி வரும் நிலையில் விஜய் டிவி பிரபலங்களும் ரியோவை இறுதி போட்டிக்கு அனுப்ப சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர். கடந்த வாரம் ரியோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இந்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் அவரை நாமினேட் செய்ய முடியாது என்று பலரும் நினைத்தனர்.

இறுதி வாரத்தில் ரியோவை கேப்டனாக்கி அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப விஜய் டிவி திட்டமிட்டுவிட்டது என்று பல விமர்சனங்கள் எழுந்தது. அதே போல இந்த வாரம் நாமினேஷன் கூட நடைபெற்றது. ஆனால், இறுதி வாரம் என்பதால் இந்த முறை அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு உள்ளதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். எனவே, யார் யார் இறுதி போட்டிக்கு செல்வார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

-விளம்பரம்-

இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ள நிலையில் ரியோவை இந்த வாரம் காப்பற்றி இறுதி போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று விஜய் டிவி பிரபலங்கள் சமூக வலைதளத்தில் மறைமுக பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர். இந்த வாரம் விஜய் டிவி சிரியல்களில் நடித்து வரும் சஞ்சீவ், ஆல்யா மானஸா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன், ஸ்ரீதேவி அசோக் என்று பலரும் ரியோவிற்கு ஹாட் ஸ்டாரில் 50 ஓட்டுக்களை போட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நாள் வரை இல்லாமல் இறுதி போட்டி நெருங்கும் வேலையில் ரியோவிற்கு ஏன் விஜய் டிவி பிரபலங்கள் ஆதரவு தெரிவிப்பதை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதில் இருந்தே ரியோ இறுதி போட்டிக்கு நுழைவதோடு கண்டிப்பாக முதல் மூன்று இடத்தில் இடம்பிடித்துவிடுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.

Advertisement