பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரித்விகா..!

0
376
Rithvika

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது, இறுதி வாரம் என்பதால் கடந்த சில நாட்களாக பலரும் சிறப்பு விருந்தினராக வந்து சென்ற வண்ணம் இருந்தனர் . சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.

Rithvika-bigg-boss

நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் கோப்பையுடன் வீட்டிற்குள் சென்றதும் போட்டியாளர் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது பின்னர் ஜனனி, ரித்விகா,ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோருடன் லிவிங் ஏரியாவில் விஜய் தேவேர்கொண்டா பேசிக்கொண்டிருக்கையில், பிக் பாஸ் பட்டத்தை யார் வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு விஜி, ஐஸ்வர்யா, ஜனனி மூவரும் ரித்விகாவின் பெயரைத்தான் கூறியிருந்தனர். பின்னர் விஜய் தேவர்கொண்டா பேசுகையில் ஒரு வேலை நீங்கள் பிக் பாஸ் படத்தை வென்றால் என்ன பேசுவீர்கள் என்று சின்ன ஒத்திகையை காணலாம் என்று கூறுகிறார்.

bigg-boss

விஜய் தேவர்கொண்டா, ரித்விகா தான் டைட்டில் வின்னர் என்று அறிவித்து கோப்பையை ரித்விகா கையில் கோப்பையை கையில் கொடுத்த போது , தேங்க யூ பிக் பாஸ், விஜய் டிவி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி, வெற்றி என்னுடைய கையில் இருக்கிறது. வெறும் தோல்விகள் மட்டுமே சந்தித்திருந்த எனக்கு இப்போ வெற்றி என்னுடைய கையில் இருக்கிறதை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன் என்று கூறிவிட்டு அழுது கொண்டே பிக் பாஸ் கோப்பைக்கு முத்தம் கொடுத்தார் ரித்விகா.

ரித்விகா தான் பிக் பாஸ் சீசன் 2வின் வின்னர் என்று ஏற்கனவே நம்பகரமான தகவல் கிடைத்திருந்த நிலையில் ஒரு வேலை ரித்விகா வென்றால் அவர் என்ன பேச போகிறார் என்று நேற்று ரித்திகாவே பேசி இருந்தார். இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கோப்பையை கையில் வாங்கிக்கொண்டு ரித்விகா இதையே பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.