இன்று (ஜூலை 2)போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் 4 குழுக்குளாக பிரிந்து டாஸ்க் செய்தனர். அப்போது ஷாக்க்ஷி, தர்ஷன், மீரா ஆகியோர் ஒரு அணியாக டாஸ்க் செய்து கொண்டிருந்தனர்.
ஆனால், இந்த போட்டியின் முக்கிய விதியே டாஸ்க் கடிதத்தை படிப்பவர் டாஸ்க் செய்பவர்களுக்கு உதவ கூடாது என்பது தான். ஆனால், மீரா மிதுன் டாஸ்க் செய்து கொண்டிருக்கும் போது ஷாக்ஷி மற்றும் தர்ஷனுக்கு உதவி கொண்டே இருந்தார்.
இதனால் கவின் மற்றும் மீராவிற்கு வாக்கு வாதம் ஏற்பட மீரா மீது மோகன் வைத்யா, வனிதா என்று அனைவரும் பாய்ந்தனர். இதனால் சோகமடைந்த மீரா பின்னர் கார்டன் ஏரியாவில் சாண்டி, தர்ஷன், கவின், சரவணன் ஆகியோர் மீராவிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கவினும், மீராவிடம் நீ செய்தது தவறு என்றதால் தான் நான் சொன்னேன் என்றார்.
அதன் பின்னர் முகன் மற்றும் மீரா பேசுகையில், நான் உன்னிடம் பேச நிறுத்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் யாரிடம் எல்லாம் நெருஙகி பேசுகின்றேனோ அவர்களை என்னிடம் இருந்து பிரிக்க சதி செய்கிறார்கள் என்றார். அதே போல நீ யாரிடம் வேண்டுமேனாலும் பேசிக்கொள்ள என்றார் மீரா.
ஆனால், அதனை அவ்வழியாக சென்ற சாக்க்ஷி ஒட்டு கேட்டுவிட்டு பின்னர் அபிராமி மற்றும் வனிதாவிடம் சென்ற சாக்க்ஷி , முகினிடம் அபிராமியுடன் பேச கூடாது என்று மீரா சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று கொளுத்தி போட்டு விட்டார். அதன் பின்னரும் அபிராமியிடம் நன்றாக ஏற்றிவிட்டார் சாக்க்ஷி. மீரா சொல்லாததை சாக்க்ஷி சொன்னது இந்த வாரம் குறும்படமாக வந்தாலும் ஆச்சர்யபடுவதற்குயில்லை.