ஜோவிகாவ ஏத்தி விட்றதே இவங்க தான் – நல்லது சொன்ன விசித்ராவை கூட Bully செய்த மாயா&கோ.

0
263
Vichithra
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 37 வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வைரல் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 36 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இது குறித்து சிலர் பிரதீப்க்கு ஆதரவாக பேசி இருந்தார். பிறகு கடந்த வாரம் எவிக்ஷன் நடக்காது என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அன்னபாரதி வந்த வேகத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகி இருக்கிறார்.

இந்த வார நாமினேஷன் :

பின் அவர் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, கூல் சுரேஷ், மணி, ரவீனா ஆகியோரை ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். மேலும், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டார் பேசி வைத்துக்கொண்டு நாமினேஷன் செய்ததால் இனிமேல் நாமினிநேஷன் பற்றி யாரிடமும் பேசக்கூடாது, அப்படி மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று கமல் கூறி இருந்தார்.நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அர்சனா, ஆர்.ஜே.பிராவோ, ஐஷூ மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அர்ச்சனா உள்ளே சென்றதில் இருந்தே அவர் மட்டும்தான் மாயா மற்றும் அவரது கேங்கை தொடர்ந்து வச்சி செய்து வருகிறார் அதிலும் குறிப்பாக பிரதீப்பிற்கு எதிராக சதி திட்டம் தீட்டி அவரை வெளியே அனுப்பி விட்டீர்கள் என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார் அர்ச்சனா. இதனால் மாயா மற்றும் அவரது கேங் தொடர்ந்து அர்ச்சனா விற்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மற்றவர்கள் பற்றி பின்னால் பேசியதை தரையில் போட்டு காண்பித்து அதற்கு அனைவரும் முன்பும் விளக்கம் கொடுக்க சொல்லி இருக்கிறார் பிக் பாஸ். அந்த வகையில் ‘ஜோவிகாவை ஏற்றிவிடுவது மாயா,பூர்ணிமா, ஐசு போன்றவர்கள் தான் என்று விசித்ரா விளக்கம் கொடுத்த நிலையிலும் அவரை கேலி செய்து வெறுப்பேற்றி இருக்கிறது Bully Gang

Advertisement