சரவணன் மற்றும் மதுமிதா இறுதி போட்டிக்கு வருவார்களா.! வெளியான அப்டேட் இதோ.!

0
4275
saravanan-madhu
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.தற்போது கொஞ்ச நேரத்தில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் ?என்று தெரிந்து விடும்.மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள். கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.

-விளம்பரம்-
Image result for bigg boss madhumitha

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு நாட்களில் முடியும் நிலையில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகின் தான் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் விருந்தினர்களாக வந்திருந்தார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்த அந்த 100 நாட்களையும் இந்த ஒரு வாரத்தில் நினைவுக்கு கொண்டு வந்தது என்று கூட சொல்லலாம். ஒரு சில போட்டியாளர்களை தவிர அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள்.

இதையும் பாருங்க : நீ தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற மாட்டேன் என்று கூறியிருக்கிறேன் மன்னித்து விடு.! உருகிய பிரியா பவானி சங்கர்.!

- Advertisement -

மேலும் ,அந்த ஒரு சில பேர் வராததற்கு என்ன? காரணம் என ரசிகர்கள் இணையங்களில் கேள்விகளை கேட்டு வருகின்றனர். அப்படி ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கேட்ட கேள்வி மதுமிதா,சரவணனை பற்றி தான். மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்கு வராதது அனைவருக்கும் தெரிந்த காரணம்தான்.மதுமிதா மன கஷ்டங்களாலும் ,8 பேர் செய்த ராகிங்கால் மதுமிதா தற்கொலை முயற்சி செய்து கொண்டார். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார் மதுமிதா.மேலும்,அவர் வெளியே சென்று செய்தியாளர்களிடம், பல ஊடகங்களிலும் பிக் பாஸ் வீட்டை குறித்து வெளுத்து வாங்கினார்.அதுமட்டுமில்லாமல் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்த 8 போட்டியாளர்கள் செய்த குரூப் ராகிங் பற்றியும்,தனக்கு நடந்த மன உளைச்சலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு தன்னுடைய கோபத்தையும் ,ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.இதனால தான் மதுமிதாவை பிக்பாஸ் அழைக்காமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Image result for bigg boss saravanan

சரவணன் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போது தன்னுடைய இளம் வயதில் பெண்களை பஸ்ஸில் வைத்து கிண்டல், கேலி செய்திருக்கிறேன் என்று ஓபனாக பேசிய வார்த்தை மக்களிடையே சர்ச்சையை எழுப்பியது. அதனால் அவரை திடீரென்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். மேலும், சரவணனை மக்களிடையே மன்னிப்பு கேட்டும், இது போன்று நடக்க கூடாது என்றும் அறிவுரை கூறினார்கள். மேலும், மன்னிப்பு கேட்டபிறகும் சரவணனை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். இதனால கூட சரவணனை அழைக்காமல் இருக்கலாம் என ரசிகர்கள் கூறினார்கள்.ஆனால் சரவணனை மன்னித்து பிக் பாஸ் வீட்டில் மீண்டும் தொடர வைத்திருக்கலாம். அவர் இளம் வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால், என்ன? காரணம் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள், ஏன்? இன்னும் அவரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது என்று ஒரு சில பேர் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement