விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இதில் மதுமிதா, சரவணன், சேரன் உள்ளிட்டோர் எதிர் பாராத விதமாக வெளியேறி ரசிங்கர்களுக்கு ஷாக் கொடுத்தனர். அந்த வகையில் தர்ஷனின் வெளியேற்றமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.அதிலும் கடந்த வாரம் நடந்த எலிமினேஷனில் தர்சன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். முடிவாக கமல்ஹாசன் அவர்கள் இது மக்கள் ஓட்டின் மூலம் வந்த முடிவு என்று சொல்லிவிட்டார்.
ஆனால், என்ன? நடந்தது என்று ஒன்றும் புரியாத அளவிற்கு மக்கள் உள்ளனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியே சென்றதைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் மட்டும் இருந்தார்கள். மேலும், கவின் சென்றுவிட்டார் யாரும் வெளியே போக மாட்டார்கள் என்று பலரும் நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால்,கமல்ஹாசன் அவர்கள் எவிக்ஷன் இல்லை என்று நினைப்பது தவறு என்று கூறினார்.இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம்.
மேலும் , தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அந்த தகவல் பொய்யான செய்தி என்று தர்ஷனின் நண்பரான சத்யா ஒன்றில் கூறி இருந்தார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் ஜெய்சூர்யா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியில் அவர்களிடம் தர்ஷன், இந்தியன் 2 படத்தில் நடிப்பது உண்மை தானா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர்கள் இருவரும், கண்டிப்பாக அது உண்மை இல்லை. நாங்கள் தர்ஷனிடம் போன் செய்து இந்தியன் 2 படத்தில் நடிக்க போவதர்க்கு வாழ்த்து தெரிவித்து எப்போடா ட்ரீட் என்று கேட்டதற்கு போன வை டா வெண்ண என்று கூறி திட்டி விட்டான். எனவே, இந்தியன் 2 படத்தில் அவன் நடிப்பதாக வந்த செய்தி உண்மையல்ல. ஆனால், அவனுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. விரைவில் நல்ல படத்தில் அவனை பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார்.
அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷனை கமல் நேரடியக சந்தித்தது ஏன் என்று கேட்கப்பட்டதற்கு. கமல் சார் அவனிடம் நிறைய விஷயங்களை கூறியுள்ளார். விரைவில் ரசிகர்களுக்கு மிகபெரிய ட்ரீட் ஒன்று காத்துகொண்டு இருக்கிறது. அதனை தர்ஷன் வாயால் சொல்லுவான். அது வரை காத்துகொண்டு இருங்கள் என்றுகூறியிருந்தார். தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், தர்ஷன் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிய்ப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தர்ஷனுக்கு இந்த வாய்ப்பினை பிக் பாஸ் மேடையில் கமல் அறிவித்துள்ளதாக ஒரு நம்பகரமான செய்தியும் வெளியாகியுள்ளது . இந்த நிலையில் இறுதி போட்டியில் கலந்து கொண்ட தர்ஷனுக்கு கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுனத்தின் பேட்ஜ்ஜை அளித்துள்ளார். மேலும், ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுனத்தின் பேட்ஜ்ஜை தர்ஷன் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.