ஆரி இப்படி கூறுவது தேவையில்லை- கடுப்பாகி ட்விட் செய்துள்ள நடிகை ஸ்ரீப்ரியா.

0
4665
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

-விளம்பரம்-
sripriya

தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. கடந்த மூன்று தினங்களில் Ticket To Finale கான ஆறு டாஸ்குகள் நிறைவடைந்து உள்ளது.

- Advertisement -

இந்த ஆறு டாஸ்கின் முடிவின் படி ரியோ 29 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார் அவருக்கு அடுத்தபடியாக ரம்யா 27, ஷிவானி 26 சோம் மற்றும் பாலாஜி 25, ஆரி 20, கேபி 16 புள்ளிகளுடன் இருக்கின்றனர். கடந்த வாரம் அரிக்கும் பாலாஜிக்கு வாக்குவாதம் முற்றியது அதில் ஆரி பாலாஜியை ‘ நீ அம்பாலா பையன்தான் நீ குனிஞ்சி நிமிந்து வேலைசெய்’ என்று கூறியிருந்தார்.அதே போல செவ்வாய் கிழமை நிகழ்ச்சியில் ஆரி மீண்டும் பாலாஜியை ‘ அம்பல பையன் தன ஓடி வந்து புடினு ‘ சொல்லியிருந்தார்.

நடிகையான ஸ்ரீப்ரியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீவிர பின் தொடரியாக இருந்து வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘ ஆரி பல இடங்களில் சரியாக நடந்துள்ளார் ஆனால், ஆவர் தற்போது ஆம்பள பொம்பளைன்னு கூறுவது தேவையில்லாத ஒன்று’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement