இந்த முறையும் ஒரு வெளிநாட்டு தமிழர் – பிக் பாஸ் 5வில் கலந்துகொள்ள போகும் இவர் யார் தெரியுமா ?

0
2296
Renuka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குகிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ம் தேதி தொடங்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என்று சொன்ன அன்றிலிருந்தே சோசியல் மீடியாவில் பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளன.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் சீசன் 5யில் போட்டியாளராக சகிலாவின் மகள் மிளா , விஜய் டிவியில் தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை பிரியாராமன், டிக் டாக் ஜிபி முத்து, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி முன்னணி உட்பட சில பேரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ளும் இன்னொரு போட்டியாளரை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ரேணுகா பிரவீன் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் முதல் கண்கள் சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கி நடத்தி வருகிறார் ரேணுகா. ரேணுகாவின் நிறுவனத்திற்கு பல திரைப் பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக வருவார்கள்.

பொதுவாகவே பிக்பாஸ்ஸில் ஒவ்வொரு சீசனிலும் வெளிநாட்டு தமிழர் ஒருவர் கலந்துகொள்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5யில் ரேணுகா பிரவீன் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், இன்னும் ஒரு சில வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் பிக்பாஸ் குறித்து பல எதிர்பார்ப்புடன் மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement