எனக்கு அதற்கான விடை கிடைச்சிடுச்சி, வாழ்க புல்லா அது போதும் எனக்கு – பாலாஜி உருக்கமான பதிவு.

0
6150
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 4ல் இரண்டாம் இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாஜி முதன் முறையாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த அற்புதமான பயணத்தில் எனக்கு ஆதரவு அளித்த அணைத்து ரசிகர்களுக்கும் நன்றி.அதே போல என் மீது சந்தேகம் வைத்திருந்து என்னை கடினமாகவும் நன்றாகவும் உழைக்க செய்தவர்களுக்கும் நன்றி. உங்கள் அணைத்து நேரத்திற்கும், அன்பிற்கும் நன்றி என்று கூறியுள்ளார் பாலாஜி.

-விளம்பரம்-

அதே போல தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மச்சான், தம்பி தங்கச்சி எல்லாருக்கும் நன்றி. நான் பிக் பாஸ் உள்ளே இருக்கும் போது வெளியில் இருந்த என்னுடைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களே எனக்கு துரோகம் செய்தனர், நீங்கள் தான் எனக்கு ஒரு தூணாக இருந்தீர்கள். அதை நினைத்து பெருமையடைகிறேன். எந்த வருத்தமும் இல்லை, மனதார விளையாடி இந்த 105 நாட்களை அனுபவித்தேன் என்று பதிவிட்டு இருந்தார் பாலாஜி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த பாலாஜிக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குறித்து அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒரு பாலாஜிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதையும் பாருங்க : ஆரி எல்லாம் ஒரு ஆளு, பாலாஜி தான் உண்மையான வின்னர் – வெளியான மீரா மிதுனின் சர்ச்சை ஆடியோ.

- Advertisement -

அதில், யூடியூப் விஜய் டிவி போன்றவைகள் உட்பட அனைத்திலும் நீங்கள் ஒரு மோசமான நபர் என்பதை போல காண்பிக்க முயற்சி செய்தார்கள் இறுதியாக உங்களின் பிக்பாஸ் பயணம் குறித்த வீடியோவில் கூட அது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. மற்றவர்கள் அனைவருக்கும் அவர்களின் சந்தோஷமான தருணங்கள் காண்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உங்களுக்கு மட்டும் மோசமான நிகழ்வுகள் காண்பிக்க பட்டிருந்தது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறீர்கள். நீங்கள் நிறைய உள்ளங்களை வென்று இருக்கிறீர்கள் என்பதை காண்பிக்கிறது. அனைத்து எதிர்ப்புகளுக்கும் மத்தியில் கடினமாக உழைத்து உங்களை நிரூபியுங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாலாஜி, நான் நல்லவன் என்று பெயர் வாங்க உள்ளே போல. பாலாவா இருந்து உங்களுக்கு பிடிக்குமா என்று பார்க்கத்தான் போனேன். எனக்கு கிடைச்சது ஆறுகோடி கோப்பை. நான் என்னுடைய மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசினேன். இருப்பினும் நீங்கள் அனைவரும் என்னை விரும்பி உள்ளீர்கள். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது நான் நல்ல மனிதனா இல்லை கெட்ட மனிதனா என்று, நல்லவன் தான் என்று எனக்கு விடை கிடைத்திருக்கிறது. அது நீங்க சொல்லிட்டீங்க வாழ்க்கை முழுவதும் இது ஒன்று போதும் எனக்கு என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement