முகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது.! முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.!

0
6722
mugen
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக முகென் மற்றும் அபிராமி பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் முகென் குறித்தும் மற்ற போட்டியாளர்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான ஷாரிக்.

-விளம்பரம்-
mugen

இதுகுறித்து பேசியுள்ள அவர், எனக்கு முகெனை பார்க்கும் போதெல்லாம் அப்படியே என்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. ஆனால், ஒன்று முகென் பேசிய அனைத்தையும் இந்த முறை தெளிவாக ஒளிபரப்பனார்கள். ஆனால், நான் பேசியது எதுவும் போட்டு காண்பிக்கவே இல்லை.

இதையும் பாருங்க : தர்ஷனை பொறம்போக்கு என்று கூறினாரா சேரன்.! இதை கொஞ்சம் உன்னிப்பாக கேளுங்கள்.! 

- Advertisement -

நான் நிகழ்ச்சியில் இருந்த போது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் என்னிடம் வந்து நீ எங்களை பயன்படுத்திகொள்கிறாய் என்று சொன்னார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் தான் என்னை பயனப்டுத்தினார்கள். ஆனால், நான் என்னை பற்றி பேசியதை எதை பற்றியும் சரியாக காண்பிக்கவில்லை.

-விளம்பரம்-

தற்போது அதே போல முகெனை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கிறது. ஒரு புறம் ஐஸ்வர்யா எப்படி என்னிடம் இருந்தாரோ அப்படி தான் முகென் விசயத்தில் நான் அபிராமியை பார்க்கிறேன். மேலும், தனிப்பட்ட விசயங்களை பற்றி பேசகூடாது என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது.

ஆனால், வனிதா வெளியில் முகென் பற்றியெல்லாம் பலர் அளித்த பேட்டிகளை பார்த்துவிட்டு உள்ளே சென்று முகென் பற்றி அவருக்கு ஒரு காதலி இருக்கிறார் என்றெல்லாம் கூறுவதை பார்க்கும் போது மிகவும் கேவலமாக இருக்கிறது. வனிதா ஏன் இதைப்பற்றியெல்லாம் பேசுகிறார் என்பது புரியவில்லை என்று புலம்பியுள்ளார் ஷாரிக்.

Advertisement