பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகை ஷெரின் போட்ட முதல் உருக்கமான பதிவு.!

0
4896
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 நேற்றுடன் (அக்டோபர் 6) வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா துறைக்கு ‘தர்ஷன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயங்கள் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் தான் என்று அறிவித்தார்கள்.

இதையும் பாருங்க : முகென், சாண்டியை விடுங்க.! லாஸ்லியா, ஷெரின் எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள் தெரியுமா ?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றார்.அதுமட்டு இல்லைங்க பிக் பாஸ் வீட்டில் சூப்பராக விளையாடினார்.தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சிறப்பாக நேற்று முடிவடைந்தது.மேலும், இப் போட்டியின் இறுதி கட்டத்திற்கு 4 பேரை தேர்வு செய்தார்கள். அதில் ஷெரினும் ஓருவர். மேலும் பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக முகின் ராவ் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சாண்டி இரண்டாம் இடத்தையும், லாஸ்லியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.ஆனால், செரினுக்கு குறைவான அளவில் வாக்குகள் பதிவானதால் அவர் கடைசி நிமிடங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

மேலும், நான்காம் இடத்தை பெற்றார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.ஆனால்,தற்போது இந்த பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடியும், அனைவரிடமும் அன்பு பகிர்ந்து இருந்தார் என்பதால் பிக்பாஸ் குழு ‘பெஸ்ட் படி(best buddy)’ என்ற விருதை வழங்கியது. மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஷெரின் டிவிட்டர் பக்கத்தில் முதன்முதலாக பதிவிட்டுள்ளார்.ஷெரின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து இதோ,நான் வந்துட்டேன். எனக்கு ஆதரவையும், அன்பையும் அளித்த அனைத்து மக்களுக்கும்,ரசிகர்களுக்கும் ரொம்ப நன்றி. மேலும், என்னுடைய வாழ்க்கைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய சிறப்பான அனுபவமாக இருக்கும். பிக்கி பேபி நான் உன்னை ரொம்ப,ரொம்ப,ரொம்ப மிஸ் பண்றேன் என்று கூறினார்.மேலும்,i love you biggie baby என்று கூறினார்.

இதனை தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் என்னுடைய உறவினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறினார் .அது மட்டும் இல்லைங்க பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்னாடி ஷெரின் ரொம்ப குண்டா இருந்தாங்களாம், ஆனால் இந்த வீட்டு வந்ததுக்கு பின்னாடி அவர் எடையை குறைந்து அழகும் கூடி இருக்கிறார் என்று கூட ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.பிக் பாஸ் வின்னர் பட்டத்தை வென்றாரோ, இல்லையோ ? அழகி பட்டத்தை தட்டிச் சென்றார் என்று ரசிகர்கள் இணையங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஷெரினுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் ,பாராட்டுகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement