ஷிவானிக்காகவே நேத்து பிக் பாஸ் இந்த பாட்ட போட்டாரா – இதுக்கு ஷிவானி ஏற்கனவே ட்ரைனிங் எடுத்திருக்காங்க போலயே- வீடியோ இதோ.

0
37448
shivani

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ சமூக வலைதளம் தான். கடந்த சில மாதங்களாகவே சிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதிலும் மாலை 4 மணி 5 மணி என்று குறிப்பிட்ட சமயத்தில் இவர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதனாலேயே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து. இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

ஆனால், இன்ஸ்டாகிராமில் இவருக்கும் கிடைத்த ஆதரவு பிக் பாஸ் போட்டியாளர்களிடன் கிடைக்கவில்லை. சென்ற முதல் நாளே இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் மனஸ்தாபம் வந்தது. அதே போல முதல் வாரத்திலேயே இவர் அதிக ஹார்ட் பிரேககை வாங்கி வந்தார். பிக் பாஸ் வீட்டில் இவர் அதிகம் பேசவில்லை என்றாலும் காலையில் எழுந்தவுடன் பிக் பாஸ் போடும் பாடலுக்கு ஆட்டம் போட மட்டும் தவற மாட்டார். வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் காலையில் போட்டியாளர்களை உற்சாகத்துடன் எழுபவதற்காக பாடல் ஒளிபரப்பப்படும்.

- Advertisement -

இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் ஆடுவார்கள். ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஆட்டம் போட்டு வந்த ஷிவானிக்கு பிக்பாஸில் ஆட்டம் போட சொல்லித் தரவேண்டுமா என்ன?அந்த வகையில் நேற்று காலை பிக் பாஸ் வீட்டில் பட்டாஸ் படத்தில் இடம்பெற்ற ஜிகிடி கில்லாடி பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் இந்த பாடலுக்கு ஏற்கனவே நடிகை சிவானி வீட்டில் ஆட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோ ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்பட்ட இருக்கிறது. இதை பார்க்கும்போது சிவானி காகவே இந்த பாடலை நேற்று பிக்பாஸ் போட்டாரா என்ற எண்ணம் தோன்றுகிறது.

View this post on Instagram

♥️ # teamshivaninarayanan #bigbosstamilseason4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ஏவிக்ஷனில் இடம்பெற்றுள்ள சனம் ஷெட்டி, ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் இதுவரை பல்வேறு வலைதளத்தில் நடத்தப்பட்டுள்ள ஓட்டிங்கில் ரேகா மற்றும் சனம் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஓட்டிங்கில் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் தான் அதிக ஆதரவுகளை பெற்று முதல் இடத்தில் இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement