பிக் பாஸ் சீசன் 6ல் எதனால் அசீம் வென்றார் விக்ரமன் தோற்றார்? – ஷிவின் கூறிய காரணம்

0
193
shivin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயற்று கிழமை நிறைவடைந்தது. இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் சிலர் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார். இவரை தொடர்ந்து விக்ரமன் இரண்டாம் இடமும் ஷிவினுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த அஸீமிற்கு 5000000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

அதோடு ஒரு காரும் வழங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமினேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வந்தார்.என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வந்தனர்.

- Advertisement -

எதிர்பாரா வெற்றியாளர் :

இந்த நிலையில் இந்த பிக் பாஸ் சீசனில் அசீம் வெற்றியாளராகவும், விக்ரமன் இரண்டாவது வெற்றியாளராக, திருநங்கை ஷிவின் மூன்றாவது வெற்றியாளராகவும் வந்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது மேலும் பலர் அப்போ அராஜகம் செய்தால் வெற்றி பெற்று விடலாமா என்று விஜய் டிவியும், பிக் பாஸ் தொகுப்பாளர் கமலஹாசனையும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் மூன்றாவது வெற்றியாளர் ஷிவின் அசீம் பற்றி விடியோவில் பேசியிருந்தார்.

சோகம் இல்லை :

அவர் கூறுகையில் “தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி எனவும், தன்னுடைய சமூகத்தினருக்கு மக்களிடையே கிடைத்த அன்பாகத்தான் இதனை நான் பார்க்கிறேன் என்று கூறினார். நான் பிக் பாஸ் வந்த போது 4 வாரம் கூட இருக்க மாட்டேன் என்று நினைத்தேன், ஆனால் மக்கள் அவர்களுடைய மகள் போன்று எனக்கு வாக்களித்தனர் என்பது பெருமையாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்று சோகம் கிடையாது. நான் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தது பெருமையாகத்தான் உள்ளது என்று கூறினார்.

-விளம்பரம்-

அசீமிடம் பிடிக்காதது :

மேலும் அசீம் பற்றி கேட்கப்பட்ட போது அசீமை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஆனால் அவருடைய கோபம் தாம் தனக்கு பிடிக்காது என்றும், மற்ற விஷியத்தில் அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல நன்பரும் கூட எனக் கூறினார். அசீமிற்கு கிடைத்த இந்த வெற்றி மக்களால் கிடைத்த வெற்றி. அவர்களுடைய ரசிகர்கள் தான் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். அதனால் நாம் அசீமின் வெற்றியை குறை கூற முடியாது.

மக்களால் கிடைத்த வெற்றி :

மக்களுக்கு அசீம் பற்றிய ஏதோ ஓன்று மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை விட அவரை மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பின்னர் விக்ரம் பற்றி கூறிய ஷிவின் `பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களும், நானும் விக்ரமன் தான் இந்த சீசனில் வெற்றியாளர் என்று கூறினோம். ஆனால் அசீம் வெற்றி பெற்று விட்டார். விக்ரமன் வெற்றியடைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், இருந்தாலும் அசீமின் வெற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது, இதனால் நாம் அந்த விஷியத்தை குறை கூற முடியாது எனக் கூறினார் திருநங்கை ஷிவின்.

Advertisement