என்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல் – கமலின் House Of Khaddar தொழிலை திட்டி தீர்த்த பிக் பாஸ் 4 போட்டியாளர்.

0
97593
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது. கடந்த மூன்று சீசன்களை போல இந்த சீசனிலும் கமல் தான் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்த சீசனில் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வந்தார். அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருந்தார். மேலும், நெசவுத் தொழிலாளகர்கள் நலம் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயனப்டுத்த போவதாக கூறி இருந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் இறுதி போட்டியின் போது நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாக அறிவித்தார். அதே போல போட்டியாளர்களுக்கு கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார்.

-விளம்பரம்-

கமலின் இந்த House Of Khaddar என்ற புதிய முயற்சியை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் விமர்சித்தும் வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் போட்டியாளராக கலந்துகொண்ட சுச்சித்ரா, தனக்கு கொடுத்தது கதர் துணியே இல்லை அது சிந்தடிக் துணி என்றும் கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கைப்பாவை குரு என்றால் அது கமல் தான். அவரின் முட்டாள் தனமான பிராண்ட் கேவலமான ரசனை. எனக்கு கொடுக்கப்பட்டது சிந்தடிக் சட்டை என்பது தெரியும்.

- Advertisement -

அதை என்னை அணிய வைத்து அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள். என்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல். மோசமான குணம் கொண்டவர். ஒரு ரூபா கூட செலவு பண்ணல. தீந்து போச்சு கணக்கு. அவர் ஒன்னுத்துக்கும் உதவாத ஆள். கடவுள் இல்லை என்று மிகவும் கடுமையாக கமல் மற்றும் அவரின் புதிய பிராண்டை விமரித்து உள்ளார் சுச்சித்ரா

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சுச்சியும் ஒருவர். சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததும் சுசித்ரா, பாலாஜிக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வந்தார். ஆனால், இறுதி வாரத்தில் இவர் ஆரிக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் கமலின் புதிய தொழிலை சுசித்ரா கடுமையாக விமர்சித்து உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பதிவுகளை எல்லாம் உடனடியாக நீக்கிவிட்டார் சுசித்ரா. இருப்பினும் அவர் பதிவிட்ட அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement