சில பெண்கள்கிட்ட இப்படி எடக்கு மடக்கா பேசிப் பார்த்திருக்கேன் – சுரேஷ் குறித்து பல உண்மைகளை சொன்ன நிர்மலா பெரியசாமி.

0
91080
suresh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசனில் சோமசேகர், பாலாஜி முருகதாஸ் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில்சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது. இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார். அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் “வாக்குமூலம்” என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படி ஒரு நிலையில் இவரை பற்றி பிரபல செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள அவர், `1996-ல இருந்து எனக்கு அவரைத் தெரியும். எனக்கு அன்பான சகோதரர். இப்ப இருக்கிற மாதிரிதான் எப்பவும் ஜாலியா இருப்பார். அவர் இருக்கிற இடமே கலகலப்பா இருக்கும். அப்பவும் சில பெண்கள்கிட்ட இப்படி எடக்கு மடக்கா பேசிப் பார்த்திருக்கேன். ஆனா, எங்களையெல்லாம் ரொம்ப மரியாதையா நடத்துவாரு. அவரு பையன் கல்யாணம் பெங்களூர்ல நடந்துச்சு. குடும்பத்தோட போய் இரண்டு நாள்கள் தங்கி கல்யாணத்துல கலந்துகிட்டோம்” என்றவரிடம், நிகழ்ச்சி தொடங்கிய கொஞ்ச நாள்ல ஒரு செய்தி வாசிப்பாளர் `வணக்கம்’னு சொல்லும்போதே எச்சில் தெறிக்கும்னு கலாய்ச்சாரே. அவர் உங்களைத்தான் சொன்னாருன்னு சமூகவலைதளங்கள்ல எல்லாம் பரவிச்சே’ என்றோம்.

suresh

“அவர் அப்படியா சொன்னாரு. நான் பிக்பாஸ் தொடர்ந்து பார்க்க மாட்டேன். புரொமோ’ஸ் பார்க்குறதோட சரி. வணக்கம்னு சொன்னா அது நான்தான். அவர் என்கூட செய்தி வாசிச்சதும் இல்ல. ஒரே நிகழ்ச்சியில ஒண்ணா வேல பார்த்ததும் இல்ல. ஒரே பீரியட்ல நாங்க எல்லாம் சன் டிவில வேலை செஞ்சோம்… அவ்ளோதான். அவர் அப்படிச் சொன்னா `காமெடி பீஸ்’ மாதிரி ஏதோ சொல்லிட்டு இருக்காருன்னு விட்டுட்டுப் போயிட வேண்டியதுதான். விமர்சனத்துக்கெல்லாம் எதிர் விமர்சனம் செய்யுறது சரியில்ல. எனக்கு எப்பவுமே அவர் அன்பான சகோதரர்தான்” என்கிறார் நிர்மலா.

-விளம்பரம்-
Advertisement