கவின் லாஸ்லியா போல பிக் பாஸ் கதவை பிடித்த ஜோடிகள் – யார் தெரியுமா ? unseen வீடியோ இதோ.

0
55669
kavinlosliya

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் நான்காம் தேதி மிகவும் கோலாகலமாக துவங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு லவ்ஸ்டோரி நிச்சயம் இடம்பெற்றிருக்கும். முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா, இரண்டாவது சீசனில்யாஷிகா மற்றும் மகத் மூன்றாவது சீஸனில் கவின் மற்றும் லாஸ்லியா, முகேன் – அபிராமி, தர்ஷன் – ஷெரின் போன்றவர்களின் பல்வேறு லவ் ஸ்டோரி ஹைலைட்டாக இருந்தது.

எனவே இந்த ஆண்டும் கண்டிப்பாக ஒரு லவ்ஸ்டோரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சீசனில் ரம்யா பாண்டியன், ஆஜித், பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன் கேப்ரில்லா என்று பல்வேறு இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருப்பதால் கண்டிப்பாக இந்த சீசனில் லவ் ஸ்டோரி பஞ்சம் இருக்காது என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் முதல் காதல் ஜோடியாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறார்கள் பாலாஜி மற்றும் ஷிவானி.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவில் சிவானியை வாக்கிங் அழைத்துச் சென்ற பாலாஜி இரவு நேரத்தில் கூட தம்புல்ஸ் வைத்து உடற்பயிற்சிகளை செய்து சிவானியிடம் சீன் போட்டார். இப்படி ஒரு நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி எபிசோடின் Unseen வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் கதவுக்கு அருகில் அமர்ந்துகொண்டு பாலாஜி,, சிவானி ரம்யா பாண்டியன் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கு கவின் மற்றும் லாஸ்லியாவின் நினைவுதான் வந்தது.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்ஸியா இருவரும் அடிக்கடி இந்த கதவின் அருகில் தான் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆரம்பத்தில் போட்டியாளர்கள் பலரும் அமர்ந்து பேசி வந்த நிலையில் இறுதியில் அந்தக் கதவு கவின் மற்றும் லாஸ்லியாவுக்குகுத்தகை போட்டது போல மாறிவிட்டது. இந்த இடத்தில் தான் இவர்களின் இருவர் காதலும் வளர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பாலாஜி மற்றும் சிவானிக்கும் இந்த கதவு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-
Advertisement