பிக் பாஸ் வீட்டில் நுழைந்த வைல்ட் கார்ட் போட்டியாளர் – யார்னு நீங்களே பாருங்க ?

0
2414
archana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்கள் ஆன நிலையில் இன்னமும் பிக் பாஸில் சுவாரசியமான டாஸ்க் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் சலிப்புடன் இருந்து வந்தனர். என்னதான் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவத்தியின் எச்சில் பஞ்சாயத்தும், சனம் ஷெட்டி மற்றும் பாலாஜியின் ‘டுபாகூர்’ பஞ்சாயத்தும் சென்ற வாரம் கொஞ்சம் சூடு பிடித்தாலும் அது அந்த அளவிற்கு சுவாரசியமாக இல்லை. அந்த பிரச்சனையும் கடந்த வாரம் கமல் பஞ்சாயத்து செய்து முடித்துவிட்டார். இதனால் என்னடா இது ஒரு நல்ல டாஸ்க்கே இல்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் புலம்பி வந்து கொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

ரசிகர்களின் இந்த குறையை தீர்க்கும் விதமாக நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்தது. நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ‘Eviction Free Pass’ என்ற ஒரு விஷயம் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பாஸை பெரும் நபர் ஏவிக்ஷனில் இருந்து தப்பிக்கலாம். இந்த பாஸ் இந்த சீசன் முழுவதும் செல்லும் என்று பிக் பாஸ் அறிவித்ததும் இந்த வாரம் நாமினேஷனில் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் கொஞ்சம் குஷியில் ஆழ்ந்தனர்.

- Advertisement -

பிக் பாஸில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சனம் ஷெட்டி (11 Vote), ஷிவானி (6 Vote) சம்யுக்தா(5 vote) ரேகா (4 vote), ஆஜீத் (2 Vote), ரம்யா (2 Vote), கேப்ரில்லா (2 vote) ஆகியோர் இடம்பெற்றுள்னர். எனவே, இந்த 8 பேரும் இந்த ‘Eviction Free Pass’ டாஸ்கில் பங்குபெற்றனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த டாஸ்கில் தந்திரமாக செயல்பட்ட சுரேஷால் 5 பேர் இந்த டாஸ்க்கில் இருந்து வெளியேறினர். பின்னர் இறுதியில் ரம்யா, ஆஜீத், சுரேஷ் இருக்கும் போது சுரேஷின் தந்திரத்தை கண்டுபிடித்த ரம்யாவால் இந்த ‘Eviction Free Pass’ அஜீத்திற்கு கிடைத்தது.

அதே போல நேற்று நடத்தட்ட டாஸ்க் மூலம் சனம் மற்றும் வேல் முருகன் அடுத்த வார ஏவிக்ஷனில் இருந்து தப்பி இருக்கின்றனர். இவர்களை யாரும் அடுத்த வாரம் நாமினேட் செய்ய முடியாது. இப்படி ஒரு நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ஏவிக்ஷனில் இடம்பெற்றுள்ள சனம் ஷெட்டி, ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் இதுவரை பல்வேறு வலைதளத்தில் நடத்தப்பட்டுள்ள ஓட்டிங்கில் ரேகா மற்றும் சனம் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement