அனல் பறக்கப் போகும் இன்றைய பிக் பாஸ் – முதலில் காப்பாற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா ?

0
695
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 3 வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. முதல் வாரத்தில் எந்த ஒரு நாமினேஷனும் இல்லாத நிலையில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பாவணி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நாடியா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் இரண்டாம் நாமினேஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-

இதில், இதில் அபிஷேக் 6, பாவனி 5, அக்ஷரா 3, இசைவாணி 3, பிரியங்கா 3, தாமரை செல்வி 3, அபிநய் 2 என்ற விதித்தில் நாமினேஷனில் வாக்குகளை வாங்கி இருந்தனர். இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதில் அபிஷேக், சின்ன பொண்ணு, தாமரை ஆகிய 3 பேர்களில் யாரவது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதில் அபிஷேக் தான் வெளியேற வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த வாரம் பிக் பாஸில் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் வெடித்தது. கூட்டாக டாஸ்க் விளையாடியது, பிரியங்கா, அக்ஷராவை டார்கட் செய்து நோண்டிக்கொண்டே இருந்தது. பாவனி, அக்ஷரா மோதல். Trio கேங்கின் திட்டம் என்று பல சர்ச்சைகள் வெடித்தது. அதிலும் அக்ஷரா, மது கையில் எழுதி காட்டியதை பிரியங்கா சுட்டி காட்டி பெரும் பஞ்சாயத்தை இழுத்தார்.

ஆனால், இதே பிரியங்கா, நிரூப் கையில் எழுதி காட்டியதை நெட்டிசன்கள் குறும்படமாக போட்டு வச்சி செய்தனர். மேலும், இதை எல்லாம் கமல் இந்த வாரம் கேட்க வேண்டும் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இன்று கமல் பொரிந்து தள்ளி இருகிறார். மேலும், இன்றைய நிகழ்ச்சியில் முதல் ஆளாக இசைவாணி காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.

-விளம்பரம்-
Advertisement