பாவனி அபிநய் விவகாரம், ராஜுவிற்க்கு தோண்டிய குழியில் தானே விழுந்த பிரியங்கா – இந்த 15 நிமிட குறும்படத்தை பாருங்க புரியும்

0
915
priyanka
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் .

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டாஸ்க்கில் கூட சிபி, அநபிய்க்கும் பாவனிகும் இருப்பது நட்பும் இல்லை காதலும் இல்லை.

- Advertisement -

ஆனால், அவர்களுக்குள் இருக்கும் உறவு பற்றி யாருக்கும் புரியவில்லை என்று கேள்வி கேட்டிருந்தார் இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் ஒரு சிலர் இல்லை என்றும் கூறி இருந்தார்கள். அவ்வளவு ஏன் அமீர் கூட இதற்கு ஆம் என்று தான் சொல்லி இருந்தார். பாவனி விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளாக இருந்து வருகிறது .

இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல். அதே போல இந்த விவகாரத்தை அடிக்கடி கிளறி ராஜுவின் பெயரை டேமேஜ் செய்ய வேண்டும் என்று அதிகம் கஷ்டப்பட்டது பிரியங்கா தான் என்று பலர் கூறி வரும் நிலையில் நெட்டிசன் ஒருவர் இந்த விவாகரத்தில் விரிவான குறும்படம் ஒன்றை போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement