‘இந்த சீசனோட விஷ பாட்டில் பாவனி தான்’ – குறும்படம் போட்டு வச்சி செய்யும் ரசிகர்கள். (மீண்டும் மீண்டும் டேமேஜ் ஆகறாங்க)

0
15512
pavni
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்களை கடந்து உள்ளது. வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் மட்டும் தான் வீட்டுக்குள் பாசமழை, கொஞ்சல் என எல்லாம் இருந்தது. பின் கடந்த 2 வாரமாகவே பிக்பாஸ் வீட்டில் கலவரம் வெடித்து வருகிறது. கலவரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கமலஹாசனின் குறும்படம் தான். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கமலஹாசன் உடைய குறும்படம் தான்.

முதல் சீசனில் இருந்தே அவர் போடும் குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தது. நல்லவர்கள் போல வெளியில் காட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு சில போட்டியாளர்களின் உண்மை முகத்தை குறும்படம் போட்டு கிழித்து எடுத்து தொங்க விடுவார் கமல்ஹாசன் இதனாலேயே பிக்பாஸ் கமலஹாசனின் குறும்படம் என்றால் ரசிகர்கள் பயங்கர குஷி ஆகிவிடுவார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 இல் இதுவரை கமலஹாசன் அவர்கள் குறும்படம் போடவே இல்லை. இருந்தாலும் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் குறும்படங்களை தாறுமாறாக போட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நெட்டிசன்கள் பவானியின் குறும்படம் என்று சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் நாணயம் தொடர்பாக தாமரைச்செல்விக்கு இருந்த பிரச்சனை முற்றி உள்ளது. அதில் நேற்று ஸ்ருதிக்கும், தாமரைச்செல்விக்கும் இடையிலான பிரச்சனை பயங்கரமாக முற்றியது. நேற்றைய எபிசோடில் தாமரை குளித்து முடித்து விட்டு உடை மாற்றும் போது பவானியும் சுருதியும் அதை பயன்படுத்தி தாமரை உடைய நாணயத்தை எடுத்துள்ளார்கள்.

இதனால் தாமரை பயங்கரமாக கோபம் அடைந்து இது மிகப்பெரிய கேவலமான செயல், நம்பிக்கை துரோகம், நான் நம்பி தானே வைத்தேன். நான் உடை மாற்றும்போது துண்டை மறைத்து என்னை ஏமாற்றி நாணயத்தை எடுப்பது மிகப்பெரிய துரோகம் என்று அழுது புலம்பி தள்ளினார். வீட்டில் உள்ள பலரும் தாமரைக்கு சப்போர்ட் செய்தார்கள். அதே சமயத்தில் பவானி நான் ஸ்ருதிக்கு நாணயம் எடுக்க உதவி செய்யவில்லை. தாமரை பாதி உடையில் இருந்தார். அதனால் நான் துண்டை எடுத்து மறைத்தேன். அதை தவிர நான் ஸ்ருதிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பவானி கூறினார்.

-விளம்பரம்-

அதற்கு வீட்டில் உள்ள பலரும் நீ எதற்கு அங்கே சென்றாய்? நீ எதற்கு துண்டு எடுத்து மறைத்தாய்? என்று பவானியை திருப்பி கேள்வி கேட்டார்கள். இப்படி இவர்களுடைய பிரச்சனை அப்படியே போய்க்கொண்டிருக்கிறது .இந்த நிலையில் நெட்டிசன்கள் பவானியின் குறும்படம் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளனர். அதில் ஸ்ருதிக்கு பவானி உதவி செய்த காட்சிகளை பதிவிட்டு நெட்டிசன்கள் பவானியின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இதேபோல் வார இறுதியில் கமலஹாசனும் குறும்படம் போட்டு பவானியின் முகத்தை காட்டுவாரா? என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement