பிறந்தநாள் ஒரு பக்கம், வெளியேறிய சோகம் ஒரு பக்கம் – எலிமினேஷனுக்கு பின் சுருதி போட்ட முதல் பதிவு.

0
426
suruthi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்திருக்கிறது. 18 போட்டிகளில் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டது அறிவிக்கப்பட்டார் இவர்களை தொடர்ந்து மலேசியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நாடியா முதல் போட்டியாளராக வெளியேறினார்.

-விளம்பரம்-

பின்னர் இந்த சீசனில் கண்டன்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ராஜா, இரண்டாம் வாரத்திலேயே வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த வாரம் சின்ன பொண்ணு வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் இடம்பெற்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சுருதி வெளியேறினார்.

இதையும் பாருங்க : உண்மையான செங்கேணியின் தற்போதைய நிலையை வெளியில் கொண்டு வந்த வலைப்பேச்சு – பேருதவியை அறிவித்த லாரன்ஸ்.

- Advertisement -

உண்மையை சொல்லப்போனால் இந்த வாரம் அபினை தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சுருதி வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியேறுவதற்கு முன்பாக ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் தான் வைத்திருக்கும் தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார் சுருதி.

அதில் குறிப்பாக மதுமிதா மற்றும் பாவனி இருவரையும் மிஸ் செய்வதாக கூறினார். மேலும் வெளியில் வந்ததும் பாவனி மற்றும் நானும் ஒன்றாக வீடு எடுத்து தங்குவோம் என்றும் கூறியிருந்தார் சுருதி. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவை பதிவிட்டு இருக்கும் சுருதி, பாவனி மற்றும் மது ஆகிய இருவரை மற்றும் குறிப்பிட்டு மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement