பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர்..
இதில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி நாமினேஷன் பிராசஸ் இன்று நடைபெற்றது. எந்த வாரமும் இல்லாமல் இன்றுதான் நாமினேஷன் மிகவும் தாமதமாக நடைபெற்றது.
அமுதவாணன் ஏற்கனவே டிக்கெட்டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று இருப்பதால் அவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டார். எனவே, மீதமிருந்த அசிம், விக்ரமன், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி ஆகிய ஆறு பேருக்குள் மத்தியில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெற்றது.இதில் பலரும் எதிர்பாரத விதமாக அசீம் விக்ரமனை நாமினேட் செய்யவில்லை. ஆனால், விக்ரமன் அசிமை நாமினேட் செய்திருந்தார்.
இந்த வார நாமினேஷன் முடிவில் நேரடி இறுதிப்போட்டைக்கு தகுதி பெற்றிருக்கும் அமுதவாணனைத் தவிர அசிம், விக்ரமன், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி ஆறு போட்டியாளர்களுமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.எனவே இறுதி வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.
இதில் கண்டிப்பாக விக்ரமன் மற்றும் சிவின் வெளியேற அதிக வாய்ப்பு இல்லை. எனவே மீதமுள்ள நான்கு பேரில் யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் வருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், இந்த சீசனில் தான் வைல்ட் காடு போட்டியாளர் இல்லாமலேயே பிக் பாஸ் சீசன் நிறைவடைய இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய தனலட்சுமி பிக் பாஸில் இருந்து வெளியேறியவுடன் சில நாட்களாக எந்த ஒரு பேட்டியும் கொடுக்காமல் இருந்தார். எனவே அவர் வைல்ட் காடு போட்டியாராக வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறாமல் இந்த சீசன் வயல்காடு போட்டியா இல்லாமலேயே நிறைவு பெற இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இந்த சீசனின் கடைசி வாரம் என்பதால் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட இருக்கிறது. அதை வெளியில் எடுத்துக் கொண்டு யார் வெளியே செல்வார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.