ப்ரோமோ வந்த கையோடு வெளியான பிக் பாஸ் 7 போட்டியாளர்களின் முதல் செட் லிஸ்ட்.

0
2564
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பம் முதல் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் தற்போது சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்க்கான வேலைகளும் நடந்துகொண்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருந்தது. பாஸ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

ஜாக்குலின்:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் சீரியலில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் கோலமாவு கோகிலா உட்பட சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவருக்கு பெரிதாக டிவிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கத் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பிரித்திவிராஜ்:

இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர். சிறு வயதில் இருந்த இவர் படங்கள், சீரியல்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சிறந்த டான்ஸரும் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டிருந்தார். சமீபத்தில் இவருடைய திருமணம் தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகவே இருந்தது. இவர் நிகழ்ச்சிக்கு வந்தால் கண்டன்ட் கிடைக்கும் என்கிறார்கள்.

-விளம்பரம்-

தினேஷ்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தினேஷ். இவர் நடிகை ரக்ஷிதாவின் கணவர். தற்போது இவர் கிழக்கு வாசல் சீரியலில் நடிக்கிறார். கடந்த சீசனில் தான் இவருடைய மனைவி ரட்சிதா போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். அப்போது இவர் நிகழ்ச்சிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

ரேகா நேயர்:

இவரும் விஜய் டிவி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இருந்தாலும் இவருக்கு பெரிய அளவு ரீச் கிடைத்தது பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் மூலம் தான். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஷர்மிளா:

தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆன நபராக இருப்பவர் கோவை பெண் டிரைவர் ஷர்மிளா தான். இவர் இயக்கிய பேருந்தில் கனிமொழி பயணித்த பிறகு சர்ச்சையின் காரணமாக இவருக்கு வேலை சென்று விட்டது. அதற்கு பிறகு கமலஹாசனும் இவருக்கு உதவி செய்திருக்கிறார். ஏற்கனவே நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலி வந்ததை போல் மக்களில் பொது நபர்களில் ஒருவராக சர்மிளாவும் பிக் பாஸிற்கு வர வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதர்:

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஸ்ரீதர். இவரை என்டர்டைன்மென்ட் கேட்டகிரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பார் என்று கூறப்படுகிறது. சாண்டி, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து இந்த சீசனில் ஸ்ரீதர் மாஸ்டர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement