பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த எக்ஸ்குளூசிவ் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இதை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது.
முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஹாட்ஸ்டாரில் கடந்த வருடம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் ஒளிபரப்பி இருந்தது. அதற்கு பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் இந்த முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:
தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களில் விஜய் டிவி சார்பாக யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பார்கள் என்று தெரியவில்லை. இவர்களை அடுத்து நடிகை ரேகா நாயர் பிக் பாஸ் சீசன் 7 ஆடிசனில் கலந்து இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்திருக்கிறார். இன்னும் யார் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 7 குறித்த அப்டேட்:
அதாவது, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் தற்போது சென்னையில் நடந்து முடிந்து இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்குமா? இல்லை வழக்கமான மாதத்தில் தான் தொடங்குமா? என்ற தகவல் தான் தெரியவில்லை. அதோடு கமல் அவர்களும் நிறைய படங்களில் கமிட் ஆகி இருப்பதாலும், நாடாளுமன்ற தேர்தல் இருப்பதாலும் இந்த நிகழ்ச்சியை விரைவில் முடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி தொடங்கக்கூடிய தேதி குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை.