சார் அத இன்டேன்ஷனா சொல்லல சார் – வழக்கம் போல கமலிடம் பூசி மழுப்பிய மாயா. விக்ரமுக்கு டோஸ்

0
447
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கிறது. கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பின் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

டான்ஸ் மாரத்தான் டாஸ்க்:

அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருக்கிறார்கள். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள்.

மிட் வீக் எவிக்ஷன்:

இதற்கிடையில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் நாமினேட் ஆனவர்கள் தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன். இறுதியில் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா வெளியேறி இருக்கிறார். மேலும், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொரும் சிறப்பாக நடனம் ஆடி இருந்தார்கள். ஆனால், மாயா தான் பரதநாட்டியம் ஆடுவதாக குத்தாட்டம் போட்டார்.

-விளம்பரம்-

விசித்ரா- பூர்ணிமா நடனம்:

இது குறித்து விமர்சனங்கள் எழுந்து இருந்தது. பின் விசித்ரா- பூர்ணிமா இருவரும் கந்தசாமி படத்தில் வந்த என் பேரு மீனாகுமாரி என்ற பாடலுக்கு நடனம் மாறி இருந்தார்கள். பூர்ணிமா பயங்கர கிளாமராக சூப்பராக நடனம் மாறி இருந்தார். அதேபோல் விசித்ராவும் தனக்கு முடிந்தவரை ஈடு கொடுத்து நடனமாடிருந்தார். பின் நடனமாடி முடித்த பிறகு விசித்ரா, மணி இடம் உட்கார்ந்து புலம்பி இருக்கிறார். அதற்கு மணி ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ப்ரோமோ:

இப்படி இந்த வாரம் ஆட்டம் பாட்டம் என்று குதுகலமாக சென்றது. இப்படி ஒரு நிலையில் நேற்றைய எபிசோடில் கூல் சுரேஷ் வெளியேறியதால் இந்த வாரமும் டபுள் ஏவிக்ஷன் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயா, ஒரு சிலரை கரப்பாம்பூச்சு என்று பட்டப்பெயர் சொல்லி பேசியது குறித்து கண்டித்து இருக்கிறார் கமல். வழக்கம் போல மாயாவும் அதை Intensionஆக சொல்லவில்லை என்று கூறியுள்ளார.

Advertisement