போடா ப்ரோமோ பொறுக்கி – விஷ்ணுவை வெளுத்து வாங்கிய தினேஷ். ஆத்திரத்தில் விஷ்ணு

0
333
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 43 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு போன வாரம் சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

- Advertisement -

பிரதீப் குறித்த சர்ச்சை:

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு இதற்கு முழு காரணம் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. மேலும், பிரதீப் தரப்பில் இருந்து எந்த ஒரு வாதத்தையும் கேட்காமல் அவரை கமலஹாசன் வெளியேற்றியது ரொம்ப தவறு என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். இதனை அடுத்து சனிக்கிழமை எபிசோடில் மாயா, பூர்ணிமா, ஜோதிகா, ஐசுவை கமல் வெளுத்து வாங்கி பேசி இருந்தார்.

வெளியேறிய ஐசு :

அதற்குப்பின் கடந்த ஞாயிற்று கிழமை எபிசோட்டில் அனைவரும் எதிர்பார்த்தது போல் ஐசு வெளியேறினார். பின் கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வாரம் பிக் பாஸ்- ஸ்மால் பாஸ் என்ற பிரிவு கிடையாது. இந்த வாரம் எல்லாம் ஒரே பிக் பாஸ் வீடுதான் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இது போட்டியாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆனால், சில பேருக்கு வருத்தம் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

தீபாவளி கொண்டாட்டம்:

பிறகு தீபாவளி உற்சாகமாக கொண்டாடியிருந்தார்கள். சண்டை சச்சரவுகள் இருந்தாலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் சந்தோசமாக கொண்டாடி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்களுக்கு சில டாஸ்குகளையும் பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அதில் சிலருமே தங்கள் மனதில் இருந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு புகழ் சிருஸ்டி டாங்கே வந்திருந்தார்கள்.

தினேஷ் – விஷ்ணு மோதல் :

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் கானா பாலா மற்றும் விசித்ரா அனைவரையும் வச்சி செய்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று தினேஷிற்கு சீக்ரட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல் ப்ரோமோவிலேயே விஷ்ணு மற்றும் தினேஷிற்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த வாக்குவாதம் முற்றி தினேஷ், விஷ்ணுவை பார்த்து ப்ரோமோ பெருக்கி என்று திட்டியுள்ளார்.

Advertisement