விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகளும் ஒருவர். வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார்.
இந்த சீசன் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே படிப்பு விஷயத்தில் இவருக்கும் விசித்ராவிற்கும் ஒரு வாக்குவாதமே சென்றது. அப்போது ஜோவிகா, எனக்கு படிப்பு வராது ஆனால், எனக்கு கார் டயரை கழட்டி ஜாக்கி மாட்ட தெரியும் என்று சம்மந்தம் இல்லாமல் பேசினார். மேலும், இதுவரை பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை இதுவரை ஜோவிகா படித்தது கூட கிடையாது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் எழுதி பழகி வரும் ஜோவிகா தனது பெயரை ஜேபவிகா என்று எழுதி இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி மீண்டும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார் ஜோவிகா. ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வந்தார். அதிலும் அர்ச்சனாவை வயது வித்யாசம் பார்க்காமல் வாடி போடி என்று சொன்னதோடு அவரது மன உலைச்சலை கேலி செய்யும் வகையில் மெடிக்கல் ரூம் போ என்று மிகவும் தரக்குறைவாக பேசி இருந்தார்.
அதே போல டாஸ்க்கில் கூட இவர் சரியாக பங்கேற்பது கிடையாது. இதுவரை இவருக்கு இரண்டு முறை கேப்டன் ஆகும் டாஸ்க்கில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த இரண்டு டாஸ்க்கிலும் இவர் தோற்றார். மேலும், ஜோவிகா, மாயா டீமுடன் இணைந்து ஆடக் கூடாது என்பதை சூசகமாக சொல்லும் வகையில் வனிதா ‘சிங்கம் சிங்கிளாதா இருக்கும்’ என்று வாசகம் அடங்கிய டி- ஷர்ட் ஒன்றை அனுப்பி வைத்தார் வனிதா. ஆனாலும், அதையும் புரிந்துகொள்ளாமல் ஜோவிகா, மாயா மற்றும் அவரது டீமில் தான் இன்னுமும் இருந்து வருகிறார்.
அதே போல ஜோவிகாவை பெரிதாக ஒரு போட்டியாளராக கருதாமல் இருப்பதால் தான் அவர் பெரிதாக நாமினேஷனில் இடம் பெறுவது இல்லை என்பதே உண்மை. அப்படியே நாமினேஷனில் இடம்பெற்றாலும் அவரை விட வீக்கான மிக்ஸர் போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெறுவதால் ஜோவிகா தப்பித்து கொண்டு வருகிறார். ஆனால், இந்த வாரம் விக்ரம் மற்றும் இவருக்கு தான் மிக குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது.