அடிச்சி மூஞ்ச உடைச்சி வீட்டுக்கு அனுப்பிடுவான் போல – டாஸ்க்கால் முற்றிய சண்டை

0
685
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வார்த்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை கடந்து இருக்கிறது.இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருந்தது.

-விளம்பரம்-

எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பவா செல்லத்துரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாபக்கல் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் மற்ற பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு வரை தேர்ந்தெடுத்து அவரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். அதோடு அவர் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதனை தொடர்ந்து கூல் சுரேஷை அனைவரும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அடுத்த சில நிமிடத்தில் கூல் சுரேஷ் வேறு யாராவது இரண்டு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பலாம் என்று அறிவித்தார் பிக் பாஸ். உடனே கூல் சுரேஷ் மணி மற்றும் ரவீனாவை தேர்தெடுத்தார். இப்படி ஒவ்வொருவராக மாறி மாறி இந்த சாபக்கல் செல்ல இறுதியில் அந்த சாபக்கல் அக்ஷயாவிற்கு சென்றது. இதனால் அவர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அதோடு அவர் அடுத்த வார நாமினேஷனுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டார். மேலும், அந்த கல்லை ஒரு வேலை அக்ஷயா கீழே வைத்தால் அவர் அடுத்த வாரத்தை தொடர்ந்து அதற்கு அடுத்து வரும் வாரத்திற்கும் நாமினேட் செய்யப்படுவார் என்று அறிவித்தார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருந்த நபர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பகுப்பாய்வு செய்ய சொன்னார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கில் பிரதீப், ஐசவை பார்த்து எனக்கு நீ முத்தம் கொடுத்தது சரியாக தெரியவில்லை என்று மேலோட்டமாக சொல்ல, நான் எப்போ உனக்கு கொடுத்தேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் எனக்கு நீ பிளையிங் கிஸ் கொடுத்த இல்ல அத சொன்னேன் என்று பிரதீப் சொன்னார். உடனே ஐசு நான் சும்மா ஒரு ஜாலிக்காக பண்ணேன் அதை கூட நோட் பண்ணி இப்படி சொல்லுவாயா என்று டென்சன் ஆனார்.

உடனே விசித்ரா, நீ கூட தான் எனக்கு கொடுத்து இருக்க என்று பிரதீப்பை சொல்ல ‘சரி இனிமே நான் ரெண்டு பேரிடமும் வச்சிக்க மாட்டேன் என்ன மன்னிச்சிடுங்க நான் தப்பான இன்டென்ஷன்ல சொல்லல என்றார். இப்படியாக நேற்றைய எபிசோட் முடிய இன்று இரண்டாம் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் வர்மா மற்றும் விஷ்னு ஆகிய இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளனர்.

Advertisement