விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது.
அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருந்தார்கள். இப்படி இருக்க கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். 5 Wild Card போட்டியாளர்கல் நுழைந்ததால் பிக் பாஸில் 19 போட்டியாளராக மாறியது.
இதனால் Double Eviction என்று அறிவித்து ஷாக் கொடுத்தார் கமல். அந்த வகையில் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா வெளியேற்றப்பட்டார். Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர். இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கட் செய்ய துவங்கிவிட்டனர். இப்படி இருக்க நேற்றைய நிகழ்ச்சியில் Wild card போட்டியாளராக நுழைந்த போட்டியாளர்களையே பிக் பாஸ் வீட்டார், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்.
இவர்களுடன் விசித்திராவும் சென்று இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் திட்டம் போட்டு Wild Card போட்டியாளர்களை நாமினிட் செய்தனர். அதிலும் மாயா மற்றும் பூர்ணிமா, சொல்லி வைத்ததை போல Rj பிராவோ மற்றும் அன்னபாரதியை நாமினேட் செய்தனர். இறுதியில் இந்த வார நாமினேஷன் படி கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ், அன்னபாரதி, அக்ஷ்யா, மணி,ஐஷு, மாயா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.
மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் துணிகளை எங்கள் வீட்டின் வெளியில் காயப்போட கூடாது என்று தினேஷ் வாக்குவாதம் செய்ய, பூர்ணிமா மற்றும் தினேஷ் இருவருக்கும் கொஞ்சம் முடிக்ககொண்டது. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் அர்ச்சனா, தனக்கு உள்ளே நுழையும் போது வரவேற்பு குடுக்கவில்லை என்று கூறி இருந்தார். அப்போது மாயா, அர்ச்சனாவை வெறுப்பேற்றும் வகையில் பேசி இருந்தார்.
ஒரு கட்டத்தில் மாயா கொஞ்சம் அசிங்கமாக பேசியதால் கடுப்பான அர்ச்சனா, உடைந்து அழுதார். இப்படியாக நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப் கூல் சுரேஷை வாடா போடா என்றும், சில்லறை என்றும் எல்லை மீறி பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பிரதீப் பற்றி ஐசுவும் – நிக்சனும் பேசி இருக்கின்றனர். அப்போது ஐசு, ரவீனா உன்கிட்ட வந்து புலம்புறாலே, ஏன் பிரதீப்பை திட்டமாட்றா என்று கூறியுள்ளார்.