பிக் பாஸில் கலந்துகொள்ளப் போகும் பாஸ் என்கிற பாஸ்கரன் Blind டீச்சர் – அட, இவங்க இப்போ இந்த சன் டிவி சீரியல்ல நடிக்கிறாங்க இல்ல.

0
1544
Boss Engira Baskaran
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இதை தொடர்ந்து பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது.முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார்.

- Advertisement -

விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் தற்போதே இந்த சீசனில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்த உத்யேச பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி அடிபட்டு வருகிறது. அந்த வகையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பார்வை தெரியாத டீச்சராக வந்த நடிகை பிக் பாஸில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சினிமாவை பொறுத்து வரை நடிகர் நடிகைகளை விட ஒரு சில நடிகர் நடிகைகள் ஒரு சீனில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வந்த இவரும் அந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தமிழ் சினிமா உலகில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷின் இரண்டாவது படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இது 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்தப் படத்தில் வந்த அனைத்து காமெடிகளுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சீரியல் நடிகை அன்னபூரணி.

இந்த படத்தில் கண்ணு தெரியாதவராக இருந்தாலும் ஒரு வேலை செய்து கொண்டு விடாமுயற்சியுடன் போராடும் பெண்ணின் நிலையை பார்த்து ஆர்யா மனம் மாறுவார். பின் தான் நடத்தும் டுடோரியல் காலேஜ்க்கு அவரையே ஆசிரியராகவும் கொண்டுவருவார். நடிகை அன்னபூரணி அவர்கள் மதுரையில் பிறந்தவர்.இவர் சின்னத்திரையில் சன் டிவி, வசந்த் டிவி, விஜய் டிவி, கேப்டன், ராஜ் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துள்ளார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தொடர்ந்து வணக்கம் மாப்பிள்ளை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை அன்னபூரணி ராமானுஜர் என்ற தொடரின் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மாமா மாப்பிள்ளை, பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை, மரகத வீனை, வள்ளி, கல்யாண வீடு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நர்ஸ் வேடத்தில் கயலின் தோழியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement