5 பேர் உள்ளே, இரண்டு பேர் வெளியே – பிக் பாஸில் என்ட்ரி கொடுத்துள்ள அந்த 5 போட்டியாளர்கள் இவர் தான்.

0
238
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் 5 Wild card போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். கடந்த வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். தற்போது இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதற்கான ப்ரோமோவும் இன்று வெளியாகி இருக்கிறது. வழக்கமாக பிக் பாஸ் சீசன்களில் ஒன்று அல்லது இரண்டு Wild card போட்டியாளர்கள் தான் வருவார்கள். ஆனால், இந்த முறை 5 Wild கார்ட் போட்டியாளர்கள் வர இருக்கின்றனர்.

அதில் பின்னணி பாடகர் கானா பாலா, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, சோசியல் மீடியா பிரபலம் Rj பிராவோ, பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, ரசிதாவின் கணவர் தினேஷ் ஆகியோர் இந்த சீசனில் Wild card போட்டியாளராக என்ட்ரி கொடுக்க இருக்கின்றனர். ஏற்கனவே 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

தற்போது 5 wildcard போட்டியாளர்கள் உள்ளே சென்றால் பிக் பாஸ் வீட்டில் 19 பேர் ஆகிவிடுவார்கள். எனவே தான் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். பிக் பாஸில் தற்போது வரை பிரதீப், மாயாவை தவிர பெரிதாக சுவாரசியமாக ஆடும் போட்டியாளர்கள் யாரும் இல்லை. சர்ச்சைகளுக்கு பெயர் போன கூல் சுரேஷ் கூட தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். எனவே, Wild Card போட்டியாளர்களாவது சுவாரசியமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement